சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

சென்னையில் காது கேளாத 11 வயது சிறுமியை ‌மிரட்டி, 7 மாதங்கள் பாலியல் வன்கொடுமை செய்த 17 பேர் கைது.

சென்னை அயனாவரத்தில் சுமார் 300 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் டெல்லியை பூர்வீகமாக கொண்ட ஒரு குடும்பம் கடந்த 35 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அந்த வீட்டில் உள்ள 11 வயது சிறுமி 7 ம் வகுப்பு படித்து வருகிறாள். வயதிற்கேற்ற மன வளர்ச்சியும் செவித்திறனும் பாதிக்கப்பட்ட அச்சிறுமியை அதே குடியிருப்பில் வேலைசெய்யும் 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் இன்று வெளிச்சத்தில் வந்துள்ளது. சிறுமியை மிரட்டி, கலுத்தை காயப்படுத்தி, மயக்க ஊசி ஏற்றி இந்த வன்கொடுமை நடந்துள்ளது. இந்த மனித மிருகங்களின் கையில் ஏழு மாதங்கள் இச்சிறுமி கொடுமை அனுபவித்துள்ளார்.

இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் ஏழு மாதங்கள் தனக்கு நடந்த கொடுமையை இச்சிறுமி தன் வீட்டில் யாரிடமும் கூறவும் இல்லை. வீட்டிலுள்ளவர்களும் இதை கண்டுபிடிக்கவும் இல்லை. மகள் ஏன் பள்ளி முடிந்து தாமதமாக வருகிறாள்? வரும்போதெல்லாம சோகமாயிருக்கிறாளே காரணம் என்ன? ஏன் ஆங்காங்கே காயங்கள் இருக்கிறது ? இவைகளை கூட அறியாத பெற்றோரின் அலட்சிய போக்கும் இச்சிறுமிக்கு நேர்ந்த கொடுமை தான்.

தேவ பிள்ளைகளே.. நம் தேசத்தில் இனியொரு சம்பவம் இது போன்று நடக்க கூடாது. நம் பிள்ளைகளை தேவன் பாதுகாக்க வேண்டும். இதற்காக நாம் அதிகம் ஜெபிக்க வேண்டும். உங்கள் பிள்ளைளோடு நேரம் செலவிடுங்கள். அவர்களின் நடக்கைகளை கண்காணியுங்கள். எச்சரிக்கையாயிருக்க கற்றுக்கொடுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

No comments