இராணுவ முகாமில் ஞானஸ்நானம் | நேரடி வீடியோ

தங்கள் ஐீவனை தியாகம் பண்ணி தேசத்தை பாதுகாக்கும் இராணுவ வீரர்களின் முகாமில் நடந்த அதிசய காட்சியை தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.
இவர்களுக்கு போதகம் பண்ண போதகர் இல்லை. கூடி ஆராதிக்க  சபைகள் இல்லை. ஆயினும் இங்கு சுவிசேஷம் தடைபடவில்லை.
ஞானஸ்நானம் வழங்க ஆறுகளோ, தண்ணீர் தொட்டிகளோ இல்லை. ஆனால் ஞானஸ்நான ஆாராதனை தடைபடவில்லை.
JCB என அழைக்கப்படும் இராட்சத இயந்திரத்தின் கை பாகத்தில் தண்ணீர் நிரப்பி ஞானஸ்நானம் கொடுக்கப்படுகிறது. இதை பார்க்கும்போது உங்கள் உள்ளத்தில் சந்தோஷம் உண்டாகிறதா?
பிரியமானவர்களே, இயேசுவை ஏற்றுக்கொண்ட நீங்கள் ஞானஸ்நானம் பெற்று விட்டீர்களா? கடல், ஆறு, தண்ணீர் தொட்டி என சகல வாய்ப்புகளோடு அறைகூவல் விடும் போதகர்கள் நமக்கு உண்டு. ஆனால் நமக்கு மனமில்லையே.. இந்த காட்சிகள் நமம்மோடு பேசுவதாக.. 

No comments