தண்ணீர் கணக்கு :

தண்ணீர் கணக்கு :

யாத்திராகமம் 12 ன்படி..

எகிப்தை விட்டு புறப்பட்ட
இஸ்ரவேல் புருஷர்கள்.      =  6,00,000 பேர்
.....................பிள்ளைகள்.    =  3,00,000 ( மதிப்பீடு )
..................... பெண்கள்.        =  5,00,000 ( மதிப்பீடு )
பல ஜாதியான ஜனங்கள.    =  1,00,000 ( சுமார் )
                                                ________________________
ஆக மொத்தம்.                        =  15,00,000 பேர்.

இவர்கள் 15 பேர் கொண்ட (குழு )அகல வரிசையாக தண்ணீர் குடிப்பதாக வைத்துக்கொண்டால் , 1 மீட்டர் , வரிசைகளுக்கு இடையே இடைவெளி விட்டு நின்றால் , நீள் வரிசையின் நீளம் 100 கிலோமீட்டர்.( அடேங்கப்பா !!!!!! )

ஒரு குழு ஒருமுறை தண்ணீர் குடிப்பதற்கு 2 நிமிடங்கள் எடுத்துக் கொண்டால் , கடைசி குழு 138 நாட்கள் கழித்துத்தான் குடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்.!!!!!!
வழிப்பயணத்திற்கும் சிறிதளவு தண்ணீரை எடுத்து செல்வதாக இருந்தால் 347 நாட்கள் ஆகும்.!!!!!!!!
கால்நடைகளை கணக்கில் எடுத்துக்கொள்வதாக இருந்தால் இன்னும் அதிகம். 50 பேர் கொண்ட குழுவாக குடித்திருந்தால்கூட 104 நாட்கள் கணக்காகிறது.

15  லட்சம் மக்களின் தினசரி குடிநீர் தேவை ஏறக்குறைய 7500000லிட்டர்கள். இதை எடுத்துச் செல்ல 750 tanker lorryகள் , அல்லது அதற்கு ஈடான கொள்ளளவு கொண்ட கால்நடை வாகனங்கள் தேவைப்படும். இது ஒரு நாளுக்குறிய தேவை.  1 வருட தேவை........நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். பயண காலமாகிய 40 வருடங்களில் பாலைவனத்தில் எத்தனை நீர் ஆதாரங்களை  அவர்கள் சந்தித்திருக்கக்கூடும் ? 3....அல்லது 4 ?

கணக்கு மிகவும் எகிறி செல்வதால் , குளித்தல் ,துவைத்தல் , டாய்லெட் உபயோகம் இவைகளை சேர்த்துக் கொள்ளவில்லை.!!!!!

மற்ற மதிப்பீடுகள் : ( தோராயமாக )

மோசே மக்களிடம் பேசவேண்டுமானால் , 370 ஏக்கர் நிலப்பரப்பு தேவைப்படும்.  Circlic segment  வடிவில் அவர்களை நிற்க வைத்தால்கூட கடைசி வரிசை  , மோசே நிற்கும் இடத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். அவர்களிடம் கர்த்தரின் உத்தரவுகளை எடுத்துச் சொல்ல 3 மில்லியன் வாட்ஸ் ஆடியோ பவர் தேவைப்படும்.பயணிகள் ஒரு இடத்தை கடக்க 8 நாட்கள் ஆகும். அதாவது முதல்வரிசைக்கும் கடைசி வரிசைக்கும் இடையே 1 வார இடைவெளி !!!!!!!!!

No comments