கார்மேகம்

கார்மேகம் கண்ணில் தெரியுதே
பெருமழையின் இரைச்சல் காதில் கேட்குதே
எழுப்புதல் தேசத்தில் எங்கும் பரவுதே
எழும்பிடுவோம் தேவனின் யுத்த வீரரே

ஜெபித்திடுவோம் செயல்படுவோம்
துதித்திடுவோம் தேசத்தை சொந்தமாக்குவோம்

1) ஆதி சபை அற்புதங்கள் அதிகம் நடக்குமே
ஆதி அன்பு விசுவாசம் நம்மில் பெருகுமே

2) அறுவடை களத்திலே அறுப்பு மிகுதியே
அறுவடைக்கு ஆட்களோ தேவை அதிகமே

3) பாகாலின் பீடங்கள் தகர்ந்து போகுமே
கர்த்தரே தெய்வமென்ற சத்தம் கேட்குமே

4) இந்தியரின் வாய்கள் தினம் வசனம் பேசுமே
இந்தியாவின் எழுப்புதலை உலகம் பேசுமே

No comments