7 அடி உயர திருச்சிலை உடைப்பு7 அடி உயர திருச்சிலை உடைப்பு!! மத மோதல் ஏற்படும் அபாயம்!!


தேனி மாவட்டம் 
டிசம்பர் 18 2018
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மணியக்காரன்பட்டியில் உள்ள David Coit Sudder CSI ஆலய பராமரிப்பிலுள்ள குரூஸ் மலை சிலுவை 7 அடி உயரம் 1 அடி அகலம் 1 அடி கனம் உள்ள கிறிஸ்தவர்கள் புனிதமாக மதிக்கும் திருச்சிலை உள்ளது.
உடைப்பு
இந்த நிலையில் 17/12/2018 அதாவது நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் திருச்சிலையை உடைத்து முழுமையாக  சேதப்படுத்தியுள்ளனர். இது அப்பகுதியில் வாழும் கிறிஸ்தவ மக்களுக்கிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத மோதல்கள்
சமீப காலமாக அநேக இடங்களில் ஆராதனை நடத்த விடாமல் தடுப்பதும், சபைகளை உடைப்பதும், திருச்சிலுவை உடைப்பதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இது கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மை மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகார்
இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியாளரிடம் ALL INDIA CHRISTIAN FEDERATIONஅமைப்பின் தேசிய செயலாளர்  C.S JEBA SINGH அவர்கள் அளித்துள்ள புகார் கடிதத்தில் குரூஸ் மலையில் 7 அடி உயரமுடைய சிலையை சேதப்படுத்திய சமூக விரோத மர்மநபர்களை தாங்கள் விரைந்து அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரைக்கும் படி வேண்டுகோள் வைத்துள்ளார்.
பரபரப்பு.
இந்த நிலையில் அப்பகுதியைச் சார்ந்த 2000 க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த உயரதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டம் நடத்திய மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்

உடைக்கப்பட்ட சிலையின் புகைப்படங்கள்

No comments