கிறிஸ்துமஸ் குடில்

கிறிஸ்துமஸ் குடில்

கிறிஸ்துமஸ் குடில் பிறந்த சுவாரசியமான கதை

கிறிஸ்மஸ் குடில் என்பது கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்தில் மிக முக்கியமான அம்சமாக விளங்குகிறது. தொடக்க காலத்தில் கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகளை சித்தரிக்கின்ற வகையில் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் ஒத்த வேடம் அணிந்த நபர்களைக் கொண்டு தத்ரூபமாக கிறிஸ்மஸ் குடிகள் அமைக்கப்பட்டன.

வரலாற்றில் முதன் முதலாக கிறிஸ்துமஸ் குடில் அமைத்த பெருமை புனித பிரான்சிஸ் அசிசியாரையே சாரும். இவர், கி.பி. 1223-ல் இத்தாலியின் கிரேச்சோ (Greccio) என்ற இடத்தில், ஒரு குகையில் தத்ரூபமான முறையில் ஒரு நாடகத்தை அறங்கேற்றினார். அதன் பின் பல இடங்களில் இப்படிப்பட்ட நிகழ்வுகளை நடத்தினார்.

இத்தாலியில் நேப்பல் நகரம் தான் உலகின் மிகப்பெரிய உயிரோட்டமான கிறிஸ்துமஸ் குடில் காட்சியை நிகழ்த்தி காட்டியது. சுமார் 162 நாட்கள், 80 விலங்குகள், தேவதைகள், 450க்கு மேற்பட்ட சிறு உருவங்கள் என்றவாறு இணைத்து உயிரோட்டமான கிறிஸ்துமஸ் குடில் காட்சி அரங்கேற்றப்பட்டன.
இதனுடைய தாக்கம் தான் உலகமுழுவதும் கிறிஸ்துமஸ் குடிலாக வெளிப்பட்டது.

இந்த செய்தியை கூடுதல் தகவல்களோடு வீடியோவாக பார்வையிட  கீழே உள்ள லிங்கை பார்வையிடவும்.