கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை

கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை

கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்புதல் என்பது, இக்கொண்டாட்டத்தின் ஒரு சிறப்பம்சமாக இருந்து வருகிறது.

1843-ல் தான் இங்கிலாந்தில் வரலாற்றில் முதன்முதலாக கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை வடிவமைக்கப்பட்டு அனுப்பப்பட்டது. John Calcott Horsley என்பவர், தனது நண்பர் Sir Henry Cole என்பவரின் ஆலோசனையின்படி, முதல் வாழ்த்து அட்டையை வடிவமைத்து தந்தார். மிகப் பெரிய தொழில் அதிபரான Sir Henry Cole, தனது ஊழியர்களுக்கும், நண்பர்களுக்கும் அதை அனுப்பி வாழ்த்து சொன்னார்.
இதில் இடம் பெற்ற காட்சியானது, இங்கிலாந்தைச் சார்ந்த ஒரு பணக்காரக் குடும்பம் சுற்றுலாவைக் கொண்டாடுவது போன்றும், அதேசமயம் மக்கள், ஏழைகளுக்கு சேவை செய்வது போன்றும் இடம்பெற்றிருந்தது.

கிறிஸ்துவின் பிறப்பு நம்மை, சேவை மனப்பான்மை உள்ளவர்களாக மாற்றுகிறது என்பதை அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிகழ்வை தொடர்ந்து பலரும் ஆங்காங்கே இருந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து கடிதங்களை அனுப்ப துவங்கினர்.

இந்த வாழ்த்துக்கள் தந்தி, அஞ்சல், கொரியர், SMS என உருமாறி இன்று WhatsApp, Facebook  ல் நடமாடிக்கொண்டிருக்கிறது.

No comments