யூத மறைநூல்கள்:

Jewish Scriptures

யூத மறைநூல்கள்:

யூதர்களிடம் இயேசுவின் காலத்தில் நூற்றுக் கணக்கான மறைநூல்கள் இருந்தன. அவைகள் அனைத்தும் தோல் சுருள்களாக இருந்தன.  எகிப்திய ஏடுகள் பப்பேரஸ் ஏடுகளாக இருந்தன. ( யூதர்கள் அநேகம் ஆடு, மாடுகளைப் பலியிட்டதால் தோல் மிகவும் லகுவாக கிடைத்தன ).

அந்த ஏடுகள் அனைத்தும் சிறப்பாக கட்டப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன. மேலும் அடிக்கடி அவைகள் நகல் எடுக்கப்பட்டன.

இப்போது இயேசுவின் காலத்தில் இருந்த யூத மறைநூல்கள் எவை என்று காண்போம்.

1). தானாக் - Tanakh :

Torah, Nebim and Ketuvim
Collection of Writings
Law, Prophets and Writings.

முதல் ஐந்து ஆகமங்கள், தீர்க்கதரிசனங்கள், மேலும் பிற நூல்கள். எந்த நூல்கள் என்று கீழே தனியாக விளக்கியுள்ளேன். ( மொத்தமாக இதைப் பழைய ஏற்பாடு  என்று கூறலாம். ஆனால் இந்த நூல்களெல்லாம் தொகுக்கப்பட்டுத் தற்போது உள்ள பழைய ஏற்பாடு அமைப்பில் இருந்ததில்லை. அவைகள் அனைத்தும் தனித்தனியாகத்தான் இருந்தன. பிற்காலத்தில்தான் தொகுக்கப்பட்டன ).

2). Torah  -  தோரா - சட்ட நூல்கள்
The First Five Books of Tanakh :

தானாக்கில் உள்ள முதல் ஐந்து நூல்கள் ( ஐந்து ஆகமங்கள் ).
இவை மோசேயின் ஆகமங்கள் என்றும் அழைக்கப்பட்டன.
Pentateuch  - ஐந்தாகமங்கள்.

3). NEVI'IM  -  ( The Prophets ).
நிவிம் - தீர்க்கதரிசன நூல்கள்:

யோசுவா, நீதிபதிகள், 1,2 சாமுவேல், 1,2 அரசர்கள், ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், 12 சிறிய தீர்க்கதரிசிகள் ( ஓசியா - மலாக்கி ).

4). KETHUVIM - The Writings
கேத்துவிம்  -  காப்பியங்கள்:

சங்கீதங்கள், நீதி மொழிகள், யோபு, உன்னதப் பாட்டு, ரூத்து, புலம்பல், பிரசங்கி, எஸ்தர், தானியேல், எஸ்காப், நெகேமியா, தினவர்த்தமானம்.

5). Midrash  -  ரபிகளின் எழுத்துக்கள் :
இவைகள் ரபிகளின் அருளுரைத் தொகுப்புகள். கி.மு.6 ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரை தொடர்கிறது.
 இவற்றுள் இயேசுவின் காலத்திற்கு முற்பட்டவைளை யூதர்கள் படித்திருக்கலாம்.

6). Response  - Jewish Writings ( Case Law ).
யூதச் சட்டங்கள் பற்றிய வினாக்களுக்கு விடைகள்.
தற்போதைய ஞானோபதேசம் போன்றது. ஆயிரக்கணக்கன நூல்கள் உள்ளன.

7). Septuagint  செப்துவஜிந்த்:
Greek translation of the Hebrew Bible.
புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களும் தொடக்க காலத்தில் திருச்சபையினரும் பயன்படுத்தினர். இந்த மறைநூல்களை அவர்கள் படித்து அறிந்திருக்கலாம். ஆனால் ஒன்றிரண்டு நூல்கள்தான் கிடைத்திருக்கும். ஒருவர் படிக்க மற்றவர் கேட்டு விவாதித்திருப்பார்கள்.

ஆனால் பெரொயாவில் இருந்தவர்கள் படித்த மறைநூல்களில் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய செய்திகள் அதிகம் இருந்தன என்று எண்ண முடியாது. மெசியாவைப் பற்றிய செய்திகள் கொஞ்சம் இருந்திருக்கலாம். அவர்கள் ஆய்வு செய்தது அனைத்தும் திருத்தூதுவர்கள் கூறிய கிறிஸ்தவ வாழ்வு பற்றிய செய்திகளாகவே இருந்திருக்கலாம்.

*****    ******************************  ******

மேலும் சில மறைநூல்களை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

8). Talmud  - The Oral Torah ( The Law Book ).
ரபிகளின் விளக்கங்கள். திருச்சட்டங்களுக்கு ரபிகள் கொடுத்த விளக்கங்கள்.

9). Dead Sea Scrolls  - சவக்கடல் ஏடுகள் :
Ancient Manuscripts of the Psalms.
ஆயிரக்கணக்கான நூல்கள் எழுதப்பட்டு மலைகளில் புதைக்கப்பட்டிருந்தன. அவற்றைக் கண்டெடுத்துள்ளனர். ஆனால் படிக்கமுடியாதபடி அவைகள் சிதிலமடைந்துள்ளன.

10). Midrash   ரபிகளின் எழுத்துக்கள்:
ரபிகளின் அருளுரைகள். கி.பி. 4 ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரை தொடர்கிறது.

11). Apocrypha - Hidden books - தள்ளுபடி நூல்கள்
Hidden books are a group of 13 Jewish Textswritten from about the 5th to the 1st Centuries of BCE.  Between the times of the Old Testament and New Testament.

No comments