கீலேயாத்திலே பிசின்தைலமில்லையோ?

கீலேயாத்திலே பிசின்தைலமில்லையோ?
இரணவைத்தியனுமில்லையோ?
பின்னே ஏன்...? ஏன்...?
என் குமாரத்தி இன்னும் சொஸ்தமடையவில்லை????
ஏன் அவளுக்கு இன்னும் இந்த காயங்கள்????
ஏன் அவளுக்கு இன்னும் இந்த பாவக்கட்டுகள்???

ஏக்க பெருமூச்சு விட்டுக் கதறும்
என் ஆத்தும மணாளனுக்காக.....
என் இதயமும் ஏங்கியது....
அவருக்காக பொங்கிய என் இதயத்துடன்.....
அவர் கதறும் பெருமூச்சின் காரணமறிய
அவர் பாதம் தரித்தேன்.....!!

இதயகாயம் ஆற்றும் இரணவைத்தியரின் நேசமகளுக்கு ஏன் இந்த காயங்கள்????
ஏன் இந்த வேதனைகள்????
மேய்ச்சலைக் காணாத மான்போல
குற்றுயிரும், குலையுயிருமாய்....
சத்துருவின் முன் சத்துவமற்றுக் கிடக்கிறாளே.....😭
ஏன் இந்த சாரமற்ற, சோரம்போன நிலைமை...????
பெயரில் மட்டும் தன் நேசமணாளனைச் சுமந்து....
வாழும் வாழ்க்கையிலோ.... மாயலோகை நோக்கி ஏன் இந்த வீண்ஓட்டம்????
ஏன் இந்த வீண் பிரயாசம்???
தெருவுக்குத்தெரு கீலேயாத்துகள் பெருகிவிட்ட இந்த கிருபையின் காலத்தில்....
பிசின்தைலங்களுக்கு ஏது குறை????
அளவில்லாமல், குறைவில்லாமல், இலவசமாய்
வேதவசன பிசின்தைலங்களை வாரி வழங்கும் இந்த இரக்கத்தின் காலத்தில்....
ஏன் இந்த குணப்படா நிலைமைகள்???

என்  ஆத்துமநேசர் தம் நேசகுமாரத்தியின்
காயத்தின் காரணம் விளக்கலானார்!!!

ஆம்!
வீதிக்கு வீதி கீலேயாத்துக்களுக்கும்....
வேதவசன பிசின்தைலங்களுக்கும்...
எந்த குறைவுமில்லை....
எந்த தட்டுப்பாடுமில்லை....

ஆனாலோ....!
மருத்துவமனை சென்று
வைத்தியரிடம் காயத்துக்கு மருந்து சீட்டுப் பெற்றுவிட்டு....
மருந்தை வாங்கி உட்கொள்ளாமல்
வீட்டில் சென்று நன்றாக படுத்துறங்கும்...
பேதைமை நிறைந்த நோயாளியாக
மாறிவிட்டாள் இன்றைய நவீன கிறிஸ்தவள்......😞

ஆம்!!!!
வேதவசன மருந்துகளை அனுதினமும் உட்கொள்ள...
காயம் தீர்க்கும் அரும்மருந்தாம் ஜீவவார்த்தைகளை வாழ்வில் கடைபிடிக்க....
இருதய பலகையில் எழுதி சீர்கெட்டப் பகுதியை செப்பனிட....
ஏனோ.....அவளுக்கு....
ஆவலுமில்லை....
நேரமுமில்லை.....
அதனால்...
ஆத்தும காயங்களும் அவள் வாழ்வில் குறைந்தபாடில்லை......!!!!!!!

இரணவைத்தியரின் பிசின்தைலங்களோ.......
வழியருகே விதைக்கப்பட்ட விதையாய்.....
முள்ளுள்ள இடங்களில் நெருக்குண்ட முத்தாய்....
கற்பாறை நிலங்களில் காய்ந்துபோன கனியாய்.....
பலன் தராமல்...பரமனிடமே வெறுமையாய் திரும்புகிறது...😢

காயங்கட்டும் பரமவைத்தியர்
உன்னை பரிவுடன் அழைக்கிறார்.......!!!!!!!
நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணுவேன் என.....!!!!
நல்ல சமாரியனாம் இயேசு கிறிஸ்து
தம் இருகரம் நீட்டி அழைக்கிறார்....!!!!!
உன் காயங்களை நான் ஆற்றுவேன் என.....!!!!!

ஓடோடிச் செல்வாளா தன்
பரமதகப்பனின் கீலேயாத்தண்டை....????
தன் ஆத்தும சீர்கேடுகளைக் களைய பரமவைத்தியர் கொடுக்கும் வேதவசன பிசின்தைலங்களை அனுதினமும் உட்கொண்டு மகிழ்வாளா?

உட்கொள்வாளானால்......
ஆரோக்கியமான வாழ்வு அவளுடையதாகும்....!!!
இடறலற்ற கிறிஸ்தவமும் அவளுடையதாகும்....!!!

அவள் ஆரோக்கியமடைந்தால்.....
அவள்மூலம் அநேகர் ஆரோக்கியம் பெறுவார்கள்!!!!
கிறிஸ்துவின் பேரன்பை தங்கள் வாழ்விலும் ருசிப்பார்கள்...!!!!

No comments