ஓர் உண்மை சாட்சி

*தேவன் நமக்காக யுத்தம் செய்வார்!
( *ஓர் உண்மை சாட்சி** )👇

தமிழ் நாட்டில் பரமக்குடியில் தேவ ஊழியர் சகோ.ஜுப்ளின் ஜோசப்.இவர் எபிரேய  மொழியை நன்கு அறிந்தவர்.ஆண்டவரின் செய்தியை வல்லமையாக கொடுப்பவர்.
இவரின் மூத்த சகோதரர் பிலிப் ஜோசப்.
இவரைப்பற்றிய ஓர் உண்மை சம்பவத்தை ஜுப்ளின் பகிர்ந்து கொண்டார்.
1990 ம் ஆண்டு பிலிப்ஜோசப் கத்தார் எனும் அரபு தேசத்தில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில்  பணிபுரிந்து   வந்தார்.
ஒரு நாள் தன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது காவல்துறை அதிகாரி வழிமறித்தார் . காரின்  முன் சீட்டில் வைத்திருந்த பைபிளை பார்த்து " இது என்ன? எனக்கேட்டார். பிலிப் ' இது கடவுளின் வார்த்தைகள் அடங்கிய பைபிள் "என்றார். அந்த அதிகாரி 'இல்லை அல்லா ஒருவர் தான் கடவுள். இதில் அவருடைய வார்த்தை  இல்லை,தவறாக சொல்கிறாய்'என வாக்குவாதம் பண்ணி  கூட்டம் கூடி பிரச்சனை பெரிதாகிவிட்டது. கூடிய கூட்டமெல்லாம் ' நமது கடவுளை அவமதிக்கிறான்'எனச் சொல்ல பிலிப் சிறையில் அடைக்கப்பட்டார். நிகழ்வு கத்தார் மன்னருக்கு தெரிவிக்கப்பட அவர்  பிலிப்பை நாடு கடத்த உத்தரவிட்டார். அதிகாரிகள் பிலிப்பை தன் மேல்சட்டையை கூட அணிய விடாமல் அவமானப்படுத்தி விமானத்தில் ஏற்றி நாடு கடத்தினர்.
அவர் குடும்பத்தினர் யாவருடைய கண்களில் கண்ணீர் வழிந்தோட ,பிலிப் தன் ஆண்டவருக்காக நிந்தையை சகித்து பொறுமையாக விமானத்தில் ஏறி குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று ஓர் பணி தேடி அங்கே வசித்து வந்தார்.அங்கேயும் ஓய்வு நேரங்களில் ஆண்டவரைப்பற்றிய கைப்பிரதிகளை விநியோகித்து சுவிசேஷ பணி செய்து வந்தார். ஒரு நாளில் மெட்ரோ ரெயிலில் ஓர் நடுத்தர வயது பெண்மணி கவலையாக அழுது கொண்டிருந்ததைப்பார்த்தவர் அந்த பெண்மணியிடம் சென்று கைப்பிரதி கொடுத்து ஆறுதலாக பேசினார். லில்லி எனும் அந்த பெண்மணி தன் கணவர் தன்னை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு திருமணம் செய்யப்போவதாகவும் தன் பிள்ளைகள் எதிர்காலம் குறித்து கலங்குவதாகவும் தெரிவித்தார். பிலிப் அவருக்கு ஆறுதல் கூறி அவருக்காக ஜெபித்து தன் முகவரியையும் கூறி சென்றார். சுமார் 1 மாதம் கழித்து அதே பெண்மணி போனில் தொடர்புகொண்டு மகிழ்ச்சியுடன்' பிலிப் என் கணவர் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார், அதுமட்டுமல்ல இங்குள்ள அமெரிக்க அலுவலகத்திலிருந்து அமெரிக்கா வெள்ளை   மாளிகைக்கு பணிமாறுதல் கிடைத்துவிட்டதாகவும் குடும்பத்துடன் அங்கே செல்லப்போவதாகவும் ஆண்டவருக்கு நன்றி 'எனவும் தெரிவித்தார்.
*
இப்போது ஆண்டவர் தன்பிள்ளையான பிலிப்பிற்காக எண்ணமுடியாத ஓர்* பெரிய காரியத்தை செய்ய ஆரம்பிக்கிறார்.*

அந்த பெண்மணி லில்லி அமெரிக்க வெள்ளை மாளிகையில் பணியில் சேர்ந்த அதே மாதத்தில் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஆண்டவரை மிகவும் நேசிக்கும் திரு.ஜார்ஜ்புஸ்ஸிடம் அரபு நாடுகளில் கிறிஸ்தவர் நடத்தப்படும் விதம் குறித்தும் தெரிவித்து பிலிப் பட்ட நிந்தையையும் தெரிவிக்கிறார்.அதே நேரம் புஷ் சாப்பிட்டுக்கொண்டிருந்த மேஜையில் கத்தார் நாட்டிற்கான அமெரிக்காவின் ஆயுத சப்ளை போன்ற உதவிகளுக்கான 10 பேர் கொண்ட ஆய்வுக்குழு பைல் ஒப்புதலுக்காக வைக்கப்படுகிறது.
அதைப் பார்த்த புஷ் லில்லியிடம் ' அவன் பெயர் என்ன சொன்னாய்? எனக்கேட்டு அந்த குழுவின் தலைமை எனும் இடத்தில் "பிலிப் ஜோசப்  " என வலது கையால் சாப்பிட்டுக்கொண்டுஇடது கையால் (இடது கை பழக்கமுள்ளவர்) எழுதினார்.
இதற்கு அடுத்த மாதத்தில் எந்த கத்தார் விமான நிலையத்தில் மேல்சட்டையை கூட அணிய விடாமல் நாடு கடத்தப்பட்டாரோ அதே விமான நிலையத்தில் சிவப்புக்கம்பள விரிப்புடன்  குழு தலைவரான பிலிப்பை வரவேற்க கத்தார் மன்னர் நின்று கொண்டிருந்தார்.🙂
அப்போது மன்னர் அருகிலிருந்த மெய் காப்பாளன் அவர் காதில் ஏதோ முணுமுணுத்தான்.
மன்னர் முகம் மாறியது. நாம் நாட்டை விரட்டிய நபரை வரவேற்கவா பூங்கொத்தோடு💐 வந்திருக்கிறேன்' என அதிர்ச்சி அடைந்தார்.
வரவேற்பு முடிந்து ஆய்வு கூட்டம் ஆரம்பித்தது.மன்னர் இருக்கைக்கு அருகே அமர வைக்கப்பட்டார் பிலிப். ( *ஆம் நம் *தேவன் தம் பிள்ளைகளை இராஜாக்களோடும் பிரபுக்களோடும்* *உயர்த்தி அமரச்செய்து அழகு பார்ப்பவரல்லவா*
கூட்டத்தில் மன்னர் பிலிப்பிடம் காதருகே குனிந்து ஏதோ சொல்கிறார். பிலிப் தன் மொழி பெயர்ப்பாளரை பார்க்க , மொழி பெயர்ப்பாளர் சொல்கிறார் ' தயவு* பண்ணி எம் நாட்டிற்கு நாங்கள் வேண்டும் உதவிகளை வழங்குங்கள் ' என கெஞ்சி கேட்கிறார் என்றார்.  பிலிப் ஆண்டவரின் பிள்ளையல்லவா; பழசையெல்லாம் மறந்து முழு உதவிகளையும் செய்ய பரிந்துரை செய்தார்.மன்னர் மன நெகிழ்வுடன் '
" கிறிஸ்தவர்கள் தீமைக்குப்பதிலாக நன்மை செய்கிறவர்கள் என  இன்று அறிந்து கொண்டேன்' என்றார் பிலிப்பின் இருகரங்களையும் பற்றியவாறு😊🌷

*ஆம் அதிசயங்களை செய்கிற தேவன் இன்றும் நம் நடுவில் இருக்கிறார். அவருடைய நாமத்திற்கே கனமும், புகழும், மாட்சிமையும் உண்டாவதாக ஆமென்!🌷*
🙏

No comments