கிறிஸ்துமஸ் கொண்டாட தடை


கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட விடாமல் தடுக்கும் இந்து அமைப்பினர்!!


சிவகாசி
19/12/2018
சிவகாசி மேற்கு எழில் நகர் குடியிருப்பு பகுதியில் பரிசுத்த சீயோன் தேவசபைபல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
முற்றுகை போராட்டம்:
இந்த நிலையில் விசுவஹிந்து பரிஷித் அமைப்பினர் பரிசுத்த சீயோன் தேவ சபையில் சட்ட விரோதமாக ஒலி பெருக்கி வைத்து அப்பாவி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், சபையை இழுத்து மூட வலியுறுத்தியும் 23/12/2018 காலை 10 மணிக்கு முற்றுகை போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்து சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனர்.
சிவகாசி பகுதியில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ் 
புகார்:
இந்த நிலையில் சிவகாசி உட்கோட்டம் காவல் ஆய்வாளருக்கு சிவகாசி மேற்கு. எழில் நகர் பகுதியில் குடியிருந்து வரும் மதன கோபால் விசுவஹிந்து அமைப்பைச் சார்ந்தவர் அளித்துள்ள புகாரில் தான் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் சென்டர் நடத்தி வருவதாகவும். தனது வீட்டின் அருகே சபை நடந்து வருவதாகவும். ஞாயிறு தோறும் அதிக சத்தத்தில் மைக் மற்றும் பாக்ஸ் வைத்து சட்டத்துக்கு புறப்பான நிலையில் செயல்படுவதாகவும். மேற்படி சர்ச் அரசு அனுமதியின்றி செயல் படுவதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
காவல் துறை பதில் :
இந்த நிலையில் காவல் ஆய்வாளர் சபை பாஸ்டருக்கு அனுப்பியுள்ள நோட்டீசில் கீழ்காணும் விதமாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும் சர்ச்சில் அதிகளவில் ஒலி எழுப்புவதை கண்டித்து சிவகாசி. விசுவஹிந்து அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிகிறது.  எனவே தாங்கள் பொதுமக்களுக்கு எந்த வித இடையூறு ஏற்படாதவண்ணம் செயல்படவும் அரசு அனுமதித்துள்ள சத்த அளவில் ஒலி பெருக்கியை உபயோகிக்க அறிவுருத்தப்படுகிறது என்று காவல்துறை தரப்பில் சபை பாஸ்டருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
காவல்துறை அனுப்பியுள்ள சம்மன் நகல்:
கிறிஸ்தவ அமைப்பினர் புகார்:
இந்த நிலையில் ALL INDIA CHRISTIAN FEDERATION அமைப்பின் தேசிய செயலாளர் C.S JEBA SINGH அவர்கள் துணை காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள புகாரில் 20 ஆண்டுகளாக நடத்தி வரும் சபையை மூடும் நோக்கத்துடன் விசுவஹிந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் அடிக்கடி இடையூறு செய்து வருகின்றனர். மற்றும் பொய்யான வழக்குகளை போதகர் மீது பதிவு செய்து வருகின்றனர். மேலும் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்து பிறப்பு விழாவை கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடக் கூடாது என்ற துர் நோக்கத்தில் வருகிற 23 ம் தேதி மேற்படி சபையை முற்றுகை இடப் போவதாகவும், போதகரை கைது செய்ய கோரியும் சிவகாசியில் விசுவஹிந்து அமைப்பினர் நோட்டிஸ் ஒட்டியுள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை சிதைக்கும் முயர்ச்சி:
இது சிவகாசி எழில் நகர் பகுதி, திருதங்கல் எழில் நகர் குடியிருப்பு வாழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது காலம் காலமாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வரும் கிறிஸ்து பிறப்பு விழாவை சிதைக்கும் ஒரு முயர்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
புகார் கடிதம் இணைப்பு
மேலும் 23 ம் தேதி விஸ்வஹிந்து பரிஷித் அமைப்பினர் நடத்த இருப்பதாக அறிவித்துள்ள முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டாம் எனவும் சபையை எவ்வித தடையும் இன்றி நடத்த தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.
அதிருப்தி:
இந்த மாதத்தில் மட்டும் அநேக கிறிஸ்தவ ஆலயங்களில் ஆராதனை நடத்தவும். கிறிஸ்துமஸ் கொண்டாடவும் பல்வேறு அமைப்புகள் எதிராக எழுந்த வண்ணம் உள்ளனர். இது ஒட்டு மொத்த கிறிஸ்த மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

No comments