அன்னாள் ஜெபத்தில்


அன்னாள் ஜெபத்தில் காணபட்ட மேன்மையான காரியங்கள்:-

1) தேவனுடைய ஆலயத்திற்கு சென்று ஜெபித்தாள் - தேவனுடைய ஆலயத்தில் தேவன் இருக்கிறார் (சங் 11:4) கர்த்தருடைய கண் இரவும் பகலும் ஆலயத்தின் மேல் திறந்திருக்கும் (1 ராஜா 8:29

2) கர்த்தரை துதித்தாள் - சேனைகளின் கர்த்தாவே  என்கிறாள் (பிலி 4:6)

3) வெகு நேரம் ஜெபம் பண்ணினாள் (தேவை ஒன்றுதான்) → கூட்டங்களில் நிண்ட நேரம் ஜெபம் பண்ண கூடாது. தனிமையில் நீண்ட நேரம் ஜெபிக்க வேண்டும்.(லூக் 20:47)

4) கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினாள் → எல்கானா அன்னாளை அதிகமாக நேசித்தாலும், ஆறுதல் வார்த்தை கூறினாலும் அன்னாள் மனிதனை நோக்காமல் கர்த்தரை நோக்கினாள் (சங் 34:5)

5) இருதயத்தில் பேசினாள் → சங் 4:4

6) அமைதியாக ஜெபித்தாள் (உதடுகள் மாத்திரம் அசைந்து) → சத்தமாக ஜெபிக்க தெரிய வேண்டும், அமைதியாகவும் ஜெபிக்க தெரிய வேண்டும்

7) பொருத்தனை பண்ணி ஜெபித்தாள் → சங் 50:13,15

8) சுய நலமில்லாமல் ஜெபித்தாள் → ஒரே ஒரு ஆண்மகனை கேட்டாள். அவனையும் கர்த்தருக்கென்றே கேட்டாள். (யாக் 4:3)

9) குறிப்பிட்டு ஜெபித்தாள் (ஆண் மகனை தாரும்)

10) தாழ்மை காணபட்டது → சிறுமையை கண்நோக்கி பாரும் (சங் 138:6)

11) தன் காரியத்தை மட்டும் கூறினாள் → பெனினாள் வாயை அடையும். அவளுக்கு முன்பாக என்னை உயர்த்தும் என்று ஜெபிக்க வில்லை.

12) இருதயத்தை உற்றி ஜெபித்தாள் → ஜெபத்தில் இருதயம் நொருங்க வேண்டும் (சங் 62:8) (சங் 51:17)

13) ஊழியக்காரரை கனம் பண்ணினாள் → நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய் என்று ஏலி கேட்டதற்கு 'அப்படியல்ல ஆண்டவனே" என்று மிகத் தாழ்மையுடன் கூறினாள். ஏலி செய்தது தவறுதான். அன்னாள் அதை பொருட்படுத்தாமல் கனப்படுத்தினாள்

14) விசுவாசத்தோடு ஜெபித்தாள்
 அப்புறம் அவள் துக்கமுகமாய் இருக்க வில்லை (ஜெபம் கேட்கபட்டது என்ற விசுவாசம் இருந்தபடியால் சந்தோஷமாக எழுந்து போனாள்) வச.18. ஜெபித்த பின்பு போஜனம்  செய்தாள்.(மாற் 11:24)

குறிப்பு:- அன்னாள் ஜெபித்தது ஒரே முறை.ஒரே ஜெபத்தில் தனது குறையை நிறைவு ஆக்கினாள். சில ஜெபம் உடனே கேட்கபடும். சில ஜெபத்துக்கு பதில் கிடைக்க தாமதம் ஆகும், ஆகையால் சோர்ந்து போகாமல் (லூக் 18:1) பதில் கிடைக்கும் வரை ஜெபிக்க வேண்டும்.

No comments