கள்ளப் போதகரை அடையாளம் கண்டுக்கொள்வது?


கள்ளப் போதகரை எப்படி அடையாளம் கண்டுக்கொள்வது? திருச்சபைகளில் கள்ளப்போதகர்கள் இருக்கிறார்கள். ஏன் கள்ளச்சகோதரர்களும் உள்ளளர். இவர்கள் கள்ளத்தீர்க்கதரிசிகள், கள்ள மேய்ப்பர்களையும் சேர்த்துத்தான். இவர்களையெல்லாம் எப்படி அடையாளம் கண்டுக்கொள்வது? நான்கு வழிகளில் இவர்களைத் தெரிந்துக்கொள்ளலாம்.

1.  அவர் தான் போதிப்பதைப்போல அவருடைய நடைமுறை வாழ்க்கை இருக்காது. யூதா 1:8 சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்.. அவர் பரிசுத்தத்தைப் பற்றிப் பேசுவார், நல்ல தரமான வாழ்க்கை முறைகளைப் போதிப்பார். பாலியல் நெறிகளைப் பேசுவார். ஆனால் இவைகள் அவரிடத்தில் இருக்காது.

2. அவர் சபையில் தான்தான் புத்திசாலி என நினைத்துக்கொள்வார். யூதா 1:10 இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத மிருகங்களைப்போல சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக் கொள்ளுகிறார்கள். "எனக்குத்தெரியும் அந்த ஊழியக்காரனைப்பற்றி" என அடுத்தவர்களைப்பற்றி தெரியாதவைகளைகூட எடுத்து அவர்களை தூஷிப்பார்கள். அவர் யோசித்துப் பேச மாட்டார், தன் உணர்வுகளால் பேசி தன்னயே கெடுத்துக்கொள்வார்.

3. சபையில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்துவார்கள். யூதா 1:16 இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப்பேசும்; தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள். சபையிலிருக்கிறவர்களைப் பற்றி முறுமுறுப்பார்கள். ஒரு குழுவாக விசுவாசிகளைப் பிரிப்பார். போற்றுகிற மாதிரி பேசி பின்னால் முகத்தைத் திருப்புவார்கள். புகழைத்தேடி சேர்ப்பவர்கள்.

4. அவர் உண்மையான கனியைக் கொண்டிருக்கமாட்டார். யூதா 1:12 இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக் கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்ளுகிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ் செத்து வேரற்றுப் போன மரங்கள்.

உங்கள் அன்பின் விருந்துகளில் உங்களோடு அச்சமின்றி விருந்துண்ணும் இவர்கள் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் பாறைகள்போல இருக்கிறார்கள். அவர்கள் தம்மைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்ளும் மேய்ப்பர்களாவார்கள். அவர்கள் காற்றால் அடித்துச்செல்லப்படுகிற மழை பொழியாத மேகங்களைப் போன்றவர்கள். அவர்கள் அறுவடைக் காலத்தில் கனி கொடுக்காத மரங்களைப் போன்றவர்கள். எனவே பூமியில் இருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் இருமுறை மரணம் அடைகிறார்கள்!

No comments