பாஸ்டர் சிரித்தால்


பாஸ்டர் சிரித்தால்...
இவருக்கு பக்தியே இல்லை என்பர்
பாஸ்டர் அழுதால்...
இவருக்கு விசுவாசமே இல்லை என்பர்
பாஸ்டர் சாப்பிட்டால்...
இவர் ஒரு சாப்பாட்டு பிரியர் என்பர்
பாஸ்டர் உபவாசித்தால்...
இவர் செய்வது வேதத்தின் படி தவறு என்பர்
பாஸ்டர் வெள்ளை துணி உடுத்தினால்..
இவர் நடிக்கிறார் என்பர்
பாஸ்டர் கலர் துணி உடுத்தினால்...
இவரெல்லாம் ஒரு ஊழியரா? என்பர்
பாஸ்டர் டை கட்டினால்...
இவருக்கு தலக்கனம் அதிகம் என்பர்
பாஸ்டர் மனந்திறந்து பேசினால்...
இவர் ஒரு எமோஷன் பார்ட்டி என்பர்
பாஸ்டர் அமைதியாய் இருந்தால்...
இவர் பெருமைக்காரர் என்பர்
பாஸ்டர் இயேசுவை பற்றியே பேசினால்...
இவர் பூமியில் வாழ தகுதியில்லாதவர் என்பர்
பாஸ்டர் சத்தமாய் பேசினால்...
இவர் மாம்சத்தில் பேசுகிறார் என்பர்
பாஸ்டர் அமைதியாய் பேசினால்...
இவர் ஒரு வல்மையற்ற ஆளு என்பர்
பாஸ்டர் பாவத்தை கண்டித்தால்...
இவர் பெரிய பரிசுத்தவானோ!? என்பர்
பாஸ்டர் ஆசீர்வாதத்தை பற்றி பேசினால்...
இவர் ஒரு பின்மாற்றக்காரர் என்பர்
பாஸ்டர் குடும்ப ஒழுங்கை பற்றி பேசினால்...
இதெல்லாம் சபையில் பேசக்கூடாது என்பர்
பாஸ்டர் கொடுத்தல் பற்றி பேசினால்...
இவருக்கு பண ஆசை வந்துவிட்டது என்பர்
பாஸ்டர் சத்தமிட்டு ஆராதித்தால்...
இவ்ளோ சவுண்டு தேவையா? என்பர்
பாஸ்டர் அமைதியாக ஆராதித்தால்...
இதில் அபிஷேகமே இல்லையே என்பர்
                                                    
(தேவனால் அபிஷேகிக்கப்பட்ட இராஜாவை அற்பமாய் பேசி, அவனை அசட்டை பண்ணினார்கள்; அவனோ காது கேளாதவன் போல இருந்தான்.
(1 சாமு 10:27)

No comments