தடை நீங்கியது! கிறிஸ்து பிறப்பு வாழ்த்து கூறி இனிப்பு மற்றும் கேக் வழங்க அனுமதி

தடை நீங்கியது! கிறிஸ்து பிறப்பு வாழ்த்து கூறி இனிப்பு மற்றும் கேக் வழங்க அனுமதி…

கரூர் 
20/12/2018
கரூர் மாவட்டம், புகழூர் பேரூராட்சி. வேலாயுதம் பகுதி, முல்லை நகரில் ECI சபை நடத்தி வரும் போதகர் குமார் அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அந்த பகுதியிலுள்ள கிறிஸ்தவ குடும்பங்களுக்கு (CAROL ROUND) இனிப்பு   மற்றும் மற்றும் கேக் வழங்க அந்த பகுதி காவல் ஆய்வாளர் அனுமதி இல்லை என்று உத்தரவு இட்டுள்ளார்.
புகார் :
இந்த சம்பவம் தொடர்பாக ALL INDIA CHRISTIAN FEDERATION  அமைப்பின் தேசிய செயலாளர் C.S JEBA SINGH அவர்கள் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காளிப்பாளர் அவர்களுக்கு தடையை நீக்க புகார் மனு அளித்தார். 
தடை நீங்கியது:
மேற்கண்ட மனுவை பரிசீலித்து கடந்த செவ்வாய் 18/12/2018 அன்று காவல் ஆய்வாளர் தடையை நீக்கி அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு வாழ்த்து கூறி இனிப்பு, கேக் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.
நன்றி!!!
தடையை நீக்கிய மாவட்ட மாவட்ட காவல் கண்காளிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியாளருக்கும். ALL INDIA CHRISTIAN FEDERATION சார்பாக நன்றியையும் வாழ்த்துகளையும் தெருவித்துக் கொள்கிறோம் என்று ALL INDIA CHRISTIAN FEDERATION அமைப்பின் தேசிய செயலாளர் C.S JEBA SINGH தனது செய்தி குறிப்பில் நன்றி தெருவித்திருந்தார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியவழக்கறிஞர் ராஜேந்திரன், BJR CHRISTIAN MEDIA மற்றும் கிறிஸ்தவ மக்கள் இயக்கம் ஆகியோருக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெருவித்து கொள்கிறோம். என்று குறிப்பிட்டிருந்தார்

No comments