கிறிஸ்மஸ் கேக்

கிறிஸ்மஸ் கேக்


        “கிறிஸ்மஸ் கேக்” என்று பிரபலமாக ஆங்கிலத்தில் அழைக்கப்படும் “கிறிஸ்துமஸ் இனிப்பு”ஆங்கிலேயர்களின் பண்பாட்டு வழக்கமாக இருந்தது. கிறிஸ்து பிறப்பு காலத்தில் அக்கொண்டாடத்தின் ஆயத்தமாக அவர்கள் நாள் முழுவதும் உபவாசம் இருப்பதும் அந்நாளின் இறுதியில், பழச்சாறைக் (Plum Porridge) குடித்து உபவாசத்தை முறித்துக்கொள்வதும் அவர்களது வழக்கமாக இருந்தது. காலப்போக்கில் இந்த பழச்சாறோடு, உலர்ந்த பழங்களும் வாசனைத் திரவியங்களும், தேனும் சேர்க்கப்பட்டபோது அது “கிறிஸ்மஸ் புட்டிங்” (Christmas pudding) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற மிருதுவான ஒரு பண்டமாக உருவெடுத்தது.

    16-ஆம் நூற்றாண்டில் இந்த இனிப்பின் செய்முறையில் மாற்றம் செய்யப்பட்டு வெண்ணெய், தானிய மாவு மற்றும் முட்டை சேர்க்கப்பட்டபோது அது “கேக்” என்று அழைக்கப்படுகின்ற இனிப்பாக உருமாறியது. கிறிஸ்மஸ் காலத்தில், இவை அதிகமாக உலர் பழங்களை உபயோகித்து உருவாக்கப்பட்டன. இன்று உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டின் உணவு பழக்கத்திற்கும், சுவைக்கும் தகுந்தால்போல உருவாக்கப்படுகிறது. கிறிஸ்மஸ், வாழ்த்துக்களைப் பகிருகின்றபோது இவை பரிமாற்றம் செய்யப்படுகின்றன. 

இந்த செய்தியை கூடுதல் தகவல்களோடு வீடியோவாக பார்வையிட  கீழே உள்ள லிங்கை பார்வையிடவும்.


No comments