இயேசு - யோசேப்பு


இயேசுவுக்கும் - யோசேப்புக்கும் உள்ள ஒற்றுமை

1) யோசேப்பு சகோதரர்களை மன்னித்தான் - இயேசு தன்னை சிலுவையில் அறைந்தார் களை மன்னித்தார்  (பிதாவே இவர்களை மன்னியும்) லூக் 23:34


2) தாழ்மை காணபட்டது (ஆதி 41:16, 45:8) - இயேசுவிடம் தாழ்மை காணபட்டது (பிலி 2:8)

3) யோசேப்பு பாடுகளை சகித்தான் (ஆதி 37:24) - இயேசு சிலுவையை (பாடுகளை) சகித்தார் (எபி 12:3)

4) யோசேப்பின் அங்கியை சகோதரர்கள் கழற்றினார்கள் (ஆதி 37:23,24) - இயேசுவின் அங்கியை போர் சேவகர்கள் கழற்றினார்கள்.

5) சகோதரர்களை கண்ட போது அழுதான் (ஆதி 42:24) - இயேசு மரியாளை கண்டு அழுதார் (லாசரு மரித்த போது) (யோ 11:35)

6) யோசேப்பு பாவத்துக்கு விலகி ஒடினான் (ஆதி 39:7-13) - இயேசு பாவிகளுக்கு விலகி இருந்தார்  (எபி 7:26)

7) தீமைக்கு நன்மை செய்தான் (ஆதி 50:18-21) - தன்னை காட்டி கொடுக்க போகும் யுதாஸ்க்கு இராபோஜனம் கொடுத்தார் (லூக் 22:21)

8) யோசேப்போடே கர்த்தர் இருந்தார் (ஆதி 39:2,3,21) - இயேசுவோடு பிதா இருந்தார் (யோ 8:29)

9) சகோதரர்களால் புறக்கணிக்கபட்டான் (ஆதி 37:18) - யுதர்களால் புறக்கணிக்கபட்டார் (மாற் 6:3,4)

10) யாக்கோபின் நேச குமாரன் (ஆதி 37:4) - பிதாவின் நேச குமாரன் (மத் 3:17)

11) தகப்பனால் சகோதரர் இடம் அனுப்ப ப ட்டான் (ஆதி 37:13) - பிதாவால் யுதர்கள் இடம் அனுப்பபட்டார் (யோ 1:11)

12) சகோதரர்களால் குற்றம் சாட்ட பட்டான் (ஆதி 37:20) - பரிசேயர், வேதபாரகர் குற்றம் சுமத்தினார்கள் (மத் 27:12)

13)  போத்திபார் மனைவி  குற்றம் சாட்டிய போது வாய் திறக்கவில்லை(ஆதி 39:14,15) - பரிசேயர், வேதபாரகர் குற்றம் சாட்டிய போது வாய் திறக்கவில்லை (மத் 27:12)

14) போத்திபார் விட்டில் அடிமை ஆனான் (ஆதி 39:1) - இயேசுவும் அடிமையின் ருபம் எடுத்தார் (பிலி 2:7)

15) சகோதரர்கள் கொலை செய்ய வகை தேடினார்கள் (ஆதி 37:18) - ஏரோது இயேசுவை கொலை செய்ய வகை தேடினான் (மத் 2:16-20)

16) யோசேப்பு அழகு உள்ளவன் (ஆதி 39:6) - இயேசு அழகு உள்ளவர் (உன்த 5:9-16)

17) கனி தரும் செடி (ஆதி 49:22) - இயேசு திராட்சை செடி (யோ 15:5)

18) நன்மை செய்தான் (சிறைசாலையில் சொப்பனத்திற்கு அர்த்தம் சொன்னான்)  - இயேசுவும் நன்மை செய்கிறவராக சுற்றி திரிந்தார்.

19) பரிசுத்தவான் (ஆதி 40:15) - இயேசுவும் பரிசுத்தவான் (எபி 7:26)

20) எகிப்து தேசத்தை காப்பாற்றிய இரட்சகன் (ஆதி 45:7,8) - இயேசு உலக இரட்சகர்.

21) குழியில் இருந்து எகிப்தின் அதிபதி  ஆக உயர்த்தபட்டான் (ஆதி 41:40) - இயேசு கல்லறையில் இருந்து பரலோக சிங்காசனத்துக்கு உயர்த்தபட்டார் (எபேசி 4:8-10

No comments