கிறிஸ்மஸ் கிப்ட்

கிறிஸ்மஸ் கிப்ட்

பரிசுப் பொருட்கள் வழங்குதல் என்பது, கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது. கீழ்த்திசை ஞானிகள் குழந்தையாக பிறந்த இயேசுவுக்கு பரிசுகளாக, பொன், தூபம், வெள்ளைப்போளம் போன்றவற்றை வழங்கினார்கள்.
இயேசுவே ராஜா என்பதற்கு அடையாளமாக பொன்னையும், தேவனின் குமாரன் என்பதற்கு அடையாளமாக தூபவர்க்கத்தையும், இயேசுவின் மரணம் உயிர்த்தெழுதல் இவைகளுக்கு அடையாளமாக வெள்ளைப்போளத்தையும் வழங்கினார்கள். சாஸ்திரிகள் இதனை தற்செயலாக கொடுத்தாலும் கொடுத்த பொருட்கள் தீர்க்கதரிசன பிரதிபலிப்பாகவே காணப்பட்டது.
சாஸ்திரிகளின் இந்த பரிசுகள் தான் வரலாற்றில் முதல் கிறிஸ்துமஸ் பரிசுகளாகும். இவர்கள் இன்றைய மத்திய கிழக்குப் பகுதியைச் சார்ந்தவர்களாக இருந்திருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது.
பரிசு பொருட்கள் வழங்குதல் என்பது, கிறிஸ்தவக் காலகட்டத்திற்கு முந்தைய உரோமைய வழக்கமாக இருந்தது. உரோமையரின் முக்கியமான விழாக்களில் உரோமைப் பேரரசர்கள், தங்கள் குடிமக்களை, பரிசுப்பொருட்களைக் கொண்டுவருமாறு ஆணையிட்டு, அதைப் பழக்கப்படுத்தினர். இந்த வழக்கம் பிற்காலத்தில், ஒரு முக்கியமான வழக்கமாக, கொண்டாட்டங்கள் ஒவ்வொன்றிலும் இடம்பெறத் துவங்கியது. கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திலும் அவ்வாறே இடம் பிடித்தது

No comments