கத்தோலிக்கம் கிறித்தவம் அல்ல


கத்தோலிக்கம் கிறித்தவம் அல்ல கிறித்தவம் கத்தோலிக்கம் அல்ல. இரண்டும் வேறு வேறு, ஆம் கத்தோலிக்கம் பாரம்பரிய காரியங்களையும்,மனிதர்களால் கொண்டுவரப்பட்ட உபதேசங்களையும் அடிப்படையாக கொண்டது. ஆனால் கிறிஸ்தவம் தேவனுடைய வார்த்தைகளை மட்டுமே அடிப்படையாக கொண்டது.

இரட்சிப்பு என்பதை கிரேக்க மொழியில் σώζω (sózó) என்று வேதாகமத்தில் எழுதியிருக்கிறார்கள்,"சோசோ" என்பது பல வார்த்தைகளை உள்ளடக்கிய ஒரு சொல், பாவ மன்னிப்பு, விடுதலை, சுகம்,பாதுகாப்பு,ஆசீர்வாதம் (ஆவிக்குரிய+உலகபிரகாரமான) அழிவில்லா நித்திய ஜீவன் இவைகள் இரட்சிப்புக்குள் அடங்கியிருக்கிறது

சரி இரட்சிப்பை ஒரு மனிதன் அடைய என்ன செய்ய வேண்டும் என்று கத்தோலிக்க மதமும்,கிறிஸ்தவமும்  போதிக்கிறது என்று பார்ப்போம்.
இதை வைத்தே கத்தோலிக்கர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

==========================
#கத்தோலிக்கம்: "குழந்தையாக இருக்கும்போதே ஞானஸ்நானம் எடுத்தால் இரட்சிப்பு கிடைக்கும்

#கிறிஸ்தவம் : மனம்திரும்பி,ஒரே கர்த்தரை விசுவாசித்து,சீஷராகி பிறகு முழுகி எடுப்பதுதான் தேவன் சொன்ன ஒரே ஞானஸ்நானம் (மத்28:19(அப் 2:38)(எபே 4:5) விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் #இரட்சிக்கப்படுவான்(மாற் 16:16)
============================

#கத்தோலிக்கம்: மரியே வாழ்க என்று பல முறை சொல்லி மரியாளின் நாமத்தை தொழுதுகொண்டால் இரட்சிப்பு கிடைக்கும்.

#கிறித்தவம்: கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.(அப்2:21,ரோமர் 10:13)
==============================

#கத்தோலிக்கம்: பாதரியாரிடம் போய் பாவ சாங்கீர்த்தனம்,பாவ அறிக்கை செய்தால் பாவமன்னிப்பு மீட்பு கிடைக்கும்.

#கிறித்தவம்: என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
(ரோமர் 10:9-10)
============================

#கத்தோலிக்கம்: பாவிகளுக்க மரியாள் வேண்டுதல் செய்வார்,பரிந்து பேசுவார் எனவே பாவிகளாக இருக்கிற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்,
என்று மரியாளை நோக்கி  ஜெபிக்க வேண்டும்

#கிறிஸ்தவம்: என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
(1 யோவான் 2:1)

============================

#கத்தோலிக்கம்: மரியாள் மற்றும் புனிதர்கள் வழியாக இரட்சிப்பை அடையலாம்,பரலோகம் போகலாம்.

#கிறிஸ்தவம்: இயேசுவே வாசல், அவர் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.(யோவான் 10:9)

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.(யோவான்14:6)
============================

#கத்தோலிக்கம்: நமது பாவங்களுக்காக பரிந்து பேச,நம்
மரண நேரத்தில் நம்மை இரட்சிக்க
 மரியாள்,அந்தோனியார்,என்னும் பல புனிதர்களின் நாமம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

#கிறிஸ்தவம்:இயேசுவாலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
(அப்போஸ்தலர் 4:12)

கத்தோலிக்க உபதேசங்களை கடைபிடிப்பவன் இரட்சிப்பை பேற முடியாது,நிச்சயம் பரலோகம் போகவே முடியாது,கர்த்தருடைய உபதேசங்களை கடைபிடிப்பவன் நிச்சயமாக இரட்சிப்பை அடைவான்,நித்திய நித்தியமாய் அவரோடு வாழ்வான்

================================

#கத்தோலிக்கம்: கத்தோலிக்க திருச்சபையே உங்களை பரிசுத்தமாக்கும்,புனிதமாக்கும் திருச்சபையும் போப்பாண்டவரும் என்ன சொல்கிறார்களோ அவைகள் தான் சத்தியம்

#கிறித்தவம்: தேவனுடைய  சத்தியமே நம்மை பரிசுத்தமாக்கும்; தேவனுடைய வசனமே சத்தியம்.
(யோவான் 17:17)

===============================

#கத்தோலிக்கம்: திருச்சபை சொல்லும் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாமல்,
மறுப்பு தெரிவித்தால்,அவர்களை திருச்சபையை விட்டு ஒதிக்கி புறம்பே தள்ளி வைப்போம்,கல்லறையில் கூட
இடம் கிடையாது.

#கிறிஸ்தவம்: என்னைத் தள்ளி என் "வார்த்தைகளை" ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். (யோவான் 12:48)
பரலோகத்தில் இடம் கிடையாது
=============================


எது முக்கியம் என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள்,

No comments