கிறிஸ்மஸ் ஸ்டார்

கிறிஸ்மஸ் ஸ்டார்

      இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய நட்சத்திரத்தின் அடையாளமாக‌த்தா‌ன் தங்கள் வீடுகளில் பெரிய நட்சத்திரங்களை அல‌ங்காரமாக தொ‌ங்க ‌விடு‌கி‌ன்றன‌ர்.

டிச‌ம்ப‌ர் மாத‌ம் ‌பிற‌ந்த உடனேயே ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் கொ‌ண்டா‌ட்ட‌த்‌தி‌ற்கான ஒரு அழை‌ப்பு ம‌ணியாக அனை‌த்து ‌கி‌‌றி‌ஸ்துவ‌ர்க‌ளி‌ன் இ‌ல்ல‌ங்க‌ளிலு‌ம் இ‌ந்த ந‌ட்ச‌த்‌திர‌‌த்தை ‌‌மி‌ன் ‌விள‌க்கு அல‌ங்கார‌த்துட‌ன் தொ‌ங்க ‌வி‌ட்டு, தங்கள் வீடுகளிலும் இயேசு பிறந்திருக்கிறார் என்று அறிவித்து மகிழ்கின்றனர் என்பதை நாம் காணலாம்.

இயேசு கிறிஸ்து அவதரித்த அன்று வானில் இப்படியொரு நட்சத்திரம் உண்மையிலேயே தோன்றியதா இல்லை கற்பனை கதையா என்று மாறுபட்ட கருத்துகளை கூறிவந்தனர். ஆனால் அவர்களது வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிவியல் ஆய்வு முடிவுகள் வெளிவந்தது. இயேசு பிறந்ததும் அதிசியதக்க வகையில் நட்சத்திரம் தோன்றியது உண்மைதான். அதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளோம் என்று அறிவித்துள்ளனர்.

No comments