கிறிஸ்மஸ் தாத்தா

கிறிஸ்மஸ் தாத்தா

         கிறிஸ்மஸ் தாத்தாவையும் பரிசுப்பொருட்களையும் ஒருபோதும் வெவ்வேறாக பிரித்துப் பார்ப்பது இயலாத ஒன்று. கிறிஸ்மஸ் தாத்தாவின் அடையாளமே பரிசுப் பொருட்கள்தான். போதகர் நிக்கோலஸ் என்பவர் தான் கிறிஸ்மஸ் தாத்தாவாக அறியப்பட்டவர்.

போதகர். நிக்கோலஸ் துருக்கி நாட்டில் “பாரா” என்ற இடத்தில், ஏறத்தாழ கி.பி. 270-ல் பிறந்தார். அவர் “மிரா” (Myra) நகரின் 4வது போதகராக பணியாற்றினார். அவர் கி.பி. 345-ல் டிசம்பர் 6-ம் நாள் இறந்தார் என கூறப்படுகிறது. போகர் நிக்கோலஸ் ஏழைகளுக்கு வாரி வழங்கும் குணம் படைத்தவராக இருந்தார். ஆனால், “உனது வலது கை செய்வதை இடது கை அறியாதிருக்கட்டும் (மத்.6:3-4)”என்ற இறைவார்த்தையின் அடிப்படையில், அவர் முகம் தெரியாத மனிதராகவே, தனது தாராள குணத்தை வெளிப்படுத்தி வந்தார்.

அவரைப் பற்றி கூற அனேக காரியங்கள் இருப்பினும் ஒன்றே ஒன்றை மட்டும் கூறுகிறேன். அவர் ஒருநாள் இரவு வறுமையின் பிடியில் சிக்கித்தவித்த ஒரு குடும்பத்தின் நிலையை அறிந்து கொள்கிறார். அந்தக் குடும்பத்தின் மூன்று இளம் பெண்கள் வறுமையின் நிமித்தமாக திருமணம் செய்ய முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்ட வேளையில், போதகர் நிக்கோலஸ் அதை அறிந்து, பல ஆயிரம் மதிப்புகொண்ட மூன்று பொற்கிண்ணங்களையும் அத்துடன் பெயர் குறிப்பிடாத ஒரு கடித்தையும் எழுதி இரவு வேளையில் அவர்கள் வீட்டில் எறிந்துவிட்டு மறைந்து விடுகிறார். அவர்கள் அதனை கொண்டு மணம் முடித்துகொண்டார்கள்.

ஏழைகளின் தந்தை என அழைக்கப்படும் இவர் மரித்த பின்பு தான் இவரது அருமை மக்களுக்கு புரிய துவங்கியது. கிறிஸ்துவின் சிந்தை கொண்ட இவரது வாழ்வு இன்றளவும் மறக்கயியல ஒன்றாக மாறிவிட்டது.

இவ்வாறு கிறிஸ்மஸ் தாத்தா கிறிஸ்மஸ் காலத்தில், சிவப்பு நிற ஆடை அணிந்து பரிசு கொடுப்பவராக உலகெங்கும் அறியப்படுகிறார். உண்மையான கிறிஸ்மஸ் தாத்தாவிற்கும் நம்ம ஊரு கிறிஸ்மஸ் தாத்தாவிற்கும் இடையில உள்ள வித்தியாசம் என்ன? கண்டு பிடிங்க பார்க்கலாம்.

No comments