ஜெபிக்க நேரமில்லைஇன்று யாரைக் கேட்டாலும் ஜெபிக்க நேரமில்லை என்று சொல்லுகிறார்கள் கவனியுங்கள்


1) (ஏனோக்கு)

பிள்ளைகள் இருக்கிறார்கள் ஜெபிக்க முடியவில்லை என்கிறார்கள் *சிலர்*
*குமாரையும் குமாரத்திகளையும் பெற்றெடுத்த ஏனோக்குக்கு தேவனோடு சஞ்சரிக்க (ஜெபிக்க)நேரமிருந்தது*.(ஆதி-5:24)


2) மோசஸ்

தேசத்தின் தலைவனாய் உயர்ந்த நிலையில் மோசே நான் இல்லாவிட்டால் காரியங்கள் சரியாக நடக்காது எல்லாம் என் தலையில் தான் நடக்கிறது என செல்லாமல் *தேவனோடு தனிமையாய் இருக்க நேரமிருந்தது*.(யாத்-34:24)


3) ஆபிரகாம்

பூமி தாங்க கூடாத செல்வம் திரளான ஆடு மாடு வேலைக்காரர்கள் நிர்வாகிக்க நேரமில்லாமல் மேய்ப்பர்களுக்குள் மோதல் அத்தனை பிரச்சினை மத்தியில் ஆபிரகாமுக்கு ஜெபிக்க நேரமிருந்தது. (ஆதி -18:22)

4) தாவீது

சமஸ்த இஸ்ரேலுக்கும் ராஜா யுத்தம் ,நீதீ நியாயம் செய்யனும். ஆனாலும் அந்தி சந்தி மத்தியானம் என மூன்று வேளையும் அரசனான தாவீது க்கு ஜெபிக்க நேரமிருந்தது
.(சங்-55:17)


5) தானியேல்

அடிமையாக வந்து அரசனுக்கு அடுத்த பதவியில் உயர்த்த பட்டாலும், தொழுது கொள்ள கூடாது என சட்டம் போட்டு தடுத்தாலும் ஜெபத்திலே தரித்து இருக்க தானியேலுக்கு நேரமிருந்தது.
(தானி-6:10)

6) சீஷர்கள்

3000, 5000 என மக்கள் சபையில் சேர்ந்த நேரம் பந்தி விசாரிக்க கூட நேரமில்லாத சூழ்நிலையிலும் சீஷர்களுக்கு ஜெபிக்க நேரமிருந்தது. (அப்-6:4)


7) அப்போஸ்தலனாகிய பவுல்

ஐரோப்பிய கண்டம் முழுவதும் சபைகளை ஸ்தாபித்த அப்போஸ்தலனாகிய பவுலுக்கு இரவும் பகலும் இடைவிடாமல் ஜெபிக்க நேரமிருந்தது. (எபே-1:16 )
(1தெச -1:2)


8) இயேசு கிறிஸ்து

இயேசு கிறிஸ்து வுக்கு இடைவிடாது ஊழியம். உணவு சாப்பிட கூட நேரமில்லாமல் இருந்தாலும் ஜனங்கள் எப்பொழுதும் சூழ்ந்து கொண்டு இருந்தாலும் பிதாவோடு உறவாட பேச நேரமிருந்தது.
லூக்-6:11,12 , மாற்கு -6:31,46

ஆனால் இன்று நமக்கு நேரம் இல்லை

கடைசியாக ஆண்டவர் செல்லுலார் உன்னை ஆசீர்வதிக்க எனக்கு நேரம் இல்லை என்று ஆகவே ஜாக்கிரதையாக இருங்கள்.

No comments