மாணவர்களுக்கு பிராத்தணைசெய்ய தடை!!


தடை!! அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பிராத்தனைக்கு தடை!!


திருச்சி
27/12/2018
                திருச்சி வெர்ட்ரி பள்ளி மைதானத்தில் வரும் 2019 ம் வருடம் ஜனவரி 6ம் தேதி அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பிராத்தனை சகோதரர் மோகன் சி லாசரஸ் -ஆல் நடப்பதாக இருந்தது.
இந்து அமைப்பினர் தடை:
       இந்த சிறப்பு பிராத்தனை நிகழ்வுகளை மதமாற்றம் செய்வதாக கூறி இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ராம ரவிக்குமார் அவர்கள் கடந்த24/12/2018 அன்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாளில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

கிறிஸ்தவ அமைப்பினர் விளக்கம்:
       இந்த நிலையில் ALL INDIA CHRISTIAN FEDERATION அமைப்பின் தேசிய செயலாளர் C.S JEBA SINGH அவர்கள் மாநகர காவல் ஆணையர் மற்றும்திருச்சி மாவட்ட ஆட்சியாளர் மற்றும் உயர்திரு காவல்துறை துணைத்தலைவர். ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
        அதாவது, தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு ஆசீர்வாத நிகழ்வு தானே தவிர, இது மத மாற்ற நிகழ்வு அல்ல. மேலும் இந்த சிறப்பு பிராத்தனையில் விருப்பபட்ட மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.

பொய்யான பிரச்சாரம்: 
அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும், அமைதியுடனும்,நட்புறவுடன் வாழும் திருச்சி மாநகர மக்களிடையே இந்து மக்கள் கட்சியினர்  மதமாற்ற நிகழ்வு நடைபெறுகிறது என பொய்யான பிரச்சாரத்தை செய்து மதக் கலவரத்தை தூண்ட முயல்கின்றனர். 

பாதுகாப்பு:
எனவே, அக்கட்சி அளிக்கும் மனுவை தாங்கள் நிராகரிக்க வேண்டும். மேற்கண்ட தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நடத்தப் படும் சிறப்பு பிராத்தனைக்கு தாங்கள் அனுமதி அளித்து தகுந்த பாதுகாப்பு அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம். இவ்லாறு அவர் அனுப்பிய மனுவில் குறிப்பிடப் பட்டிருந்தது
இந்து மக்கள் கட்சியினர் அளித்த புகார் மனு செய்தி தாளில்.

செய்தி தாள் வடிவில்.

கிறிஸ்தவ அமைப்பினர் அளித்த மனுவின் நகல்கள்:


1}மாநகர காவல் ஆணையருக்கு அனுப்பிய  மனு:2} மாவட்ட ஆட்சியாளருக்கு அனுப்பிய மனு:3} உயர் திரு காவல்துறை துணைத் தலைவர் அவர்களுக்கு அனுப்பிய மனு


No comments