கிறிஸ்துமஸ் இனிப்புகள் வழங்க தடை

கிறிஸ்துமஸ் விழாவிற்கு அருகில் வசிக்கும் வீடுகளுக்கு இனிப்புகள் வழங்க தடை !!! 

கரூர்
கரூர் மாவட்டம் புகழூர் பேரூராட்சி. வேலாயுதம் பாளையம் பகுதியிலுள்ள சக்தி நகரில் ECI சபை நடத்தி வரும் போதகர் குமார் அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சக்திநகர் பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவ குடும்பங்களுக்குச் சென்று கேக் மற்றும் இனிப்புகள் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெருவிப்பது வழக்கம். இது இந்நாள் வரை உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களால் கடைபிடித்து வரும் மரபு ஆகும்.  
மனு
இது சம்பந்தமாக வேலாயுதபுரம் பாளையம் காவல் நிலையத்தில் அனுமதி வேண்டி போதகர் குமார் மனு அளித்திருந்தார். ஆனால் காவல் ஆய்வாளர் மேற்படி நிகழ்ச்சிக்கு அனுமதி தரமுடியாது என்று கூறி மனுவை ரத்து செய்துள்ளார்.
வேண்டுகோள்
இந்த தடைகுறித்து All India Christian Federation இயக்கத்தின் தேசிய செயலாளர் திரு C.S ஜெபசிங் அவர்கள் தடை விதித்திருப்பதை நீக்க கோரி மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் மேற்கண்ட கிறிஸ்தவ வீடு சந்திப்பு நிகழ்ச்சிக்கு தடை விதித்திருப்பது தமிழகத்திலுள்ள ஒட்டு மொத்த கிறிஸ்தவர்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கிறிஸ்தவர்களின் சிறப்பு பண்டிகையான கிறிஸ்து பிறப்பு நிகழ்வை அப்பகுதி மக்கள் சந்தோசமாக கொண்டாட முடியாமல் தவிக்கின்றனர்.
      எனவே மேற்கண்ட கிறிஸ்துமஸ் விழாவை அப்பகுதி கிறிஸ்தவ மக்கள் சந்தோசமாக கொண்டாட தாங்கள் அனுமதியும் பாதுகாப்பும் தரும் படி கேட்டுக் கொள்கிறேன் என்று தன் மனுவில் CS. ஜெபசிங் (தேசிய செயலாளர் AICF)குறிப்பிட்டிருந்தார்.
இச்சம்பவம் ஒட்டு மொத்த கிறிஸ்தவர்களுக்கும் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

No comments