சிநேகிதனை அதிகாலையில் ஆசீர்வதிக்கலாமா?


நீதிமொழிகள் 27 : 14 

ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்தசத்தத்தோடே தன் சிநேகிதனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும்.


ஆங்கில வேதாகமத்தில் சிநேகிதன் என்பது அயலான் என பெரும்பான்மையாக குறிப்பிடப்பட்டுள்ளது. சத்தமாக ஆசீர்வதிப்பது தான் மாத்திரம் அல்ல,  பக்கத்துவீட்டாரும் கேட்கிறார்கள். தன்னைக்குறித்து அளவு கடந்த (அ) வரம்பு மீறியதான புகழ்ச்சி என கருதுவார்கள். தன்மானம் இழந்ததாக, கண்ணியமற்ற , உண்மைக்கு புறம்பான புகழ்ச்சியாய் நினைப்பார்கள். ரொம்பவும் புகழ்கிறானோ இல்லை காலங்காத்தாலே இப்படி புகழ்கிறானே கெட்ட நோக்கமோ என எண்ண வைக்கும். கடவுளுக்கு எதிராக நடிப்பதாய் நினைப்பார்கள். அது சாபமாய் மாறும்.

No comments