வெற்றி நிச்சயம்!

வெற்றி நிச்சயம்
தன்னில் சந்ததி பிறக்கும் என்று 
காத்திருந்த வயதான ஆபிரகாம் !


பறிபோன துரவில் பரிதபிக்காமல்  
இடம் பெயர்ந்த ஈசாக்கு !


கொஞ்சம் பெலன் இருந்தும் 
தூதனோடு போராடிய யாக்கோபு !


தவறான குற்றச்சாட்டில் சிறையில் 
சிக்கிய யோசேப்பு !


வனாந்திரத்தில் எதுவுமறியா நிற்கதியாக
நின்று தவித்த மோசே !


தேவன் என்னோடில்லை என 
போரடித்த கிதியோன் !


பிள்ளை இல்லையென ஆலயத்தின்
முன் அழுத அன்னாள் !


சவுலுக்கு பயந்து காடுகாடாக 
சுற்றித்திரிந்த தாவீது !


நானுற்றைம்பது தீர்க்கதரிசிகளுக்கு 
முன்னே நின்ற ஒரே எலியா !


முற்றிலும் எதிர்எதிரான சூழலில் 
அழுதுபுலம்பிய எரேமியா !


சாகவேண்டிய நிலையில் தேவனை
பார்ப்பேன் என ஏங்கிய யோபு !


வாழ்க்கையே பாழானாலும் 
ஏழ்மையில் பின்வந்த ரூத் !


மீன் இல்லாத வலைகளோடு 
வெறுமையாய் நின்ற பேதுரு !


வைத்தியர்களால் கைவிடப்பட்ட 
பெரும்பாடுள்ள ஸ்தீரி !


சாகப்போகிறோம் என முடிவில் 
இயேசுவின் முன் நின்ற வேசி !


அவர்களுடைய அன்றைய நிலைமையை மாற்றி உயர்த்தியவர். இன்றும் உன் நிலைமை எதுவாயிருந்தாலும் கர்த்தர் மாற்றுவார், அவர் தான் உன்னை
அழைத்தார், அவரே நடத்துவார். வெற்றி நிச்சயம்! விடுதலை சத்தியம்!!


- Beviston, Admin of TCN

No comments