சின்னமுத்து என்ற தாவீது சுந்தரானந்தம்

#அறிந்து #கொள்வோம்!
````````````````````````````````````````
சின்னமுத்து என்ற தாவீது
சுந்தரானந்தம். (1772-1806)

முதல் கிறிஸ்தவ குடியிருப்பாம் #முதலூர் ஐ உருவாக்கியவர்!
  (தூத்துக்குடி மாவட்டம்)

தென்மாவட்டத்தின்
முதல் #இரத்தசாட்சி!

சாத்தான்குளம் அருகே
#காலங்குடி என்ற சிற்றுரில் பிறந்து,

#விஜயராமபுரம் என்ற
ஊரில் வளர்ந்தவர்.

இந்து சமயத்தில் தீவிரமாக
இருந்த மக்களுக்கு,
மெய் தெய்வமாம் இயேசுவின்
அன்பை உணரச் செய்தவர்!

கிறிஸ்தவர்களாக மாறிய
மக்களையெல்லாம்
ஒன்று சேர்த்து,
முதல் கிறிஸ்தவ கிராமமாக
முதலூரை உருவாக்கியர்!

ஆரம்ப காலத்தில் பனைஓலையால் அமைக்கப்பட்டிருந்த தேவாலயத்தை,

இரண்டு முறை தீ வைத்து எரித்தனர் எதிர்ப்பாளர்கள்!

ஆனால், அதே இடத்தில்
ஒரே நாளில் 1000 பேர்
இயேசு கிறிஸ்துவை தம் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள்!

இதை பொறுக்க முடியாத எதிர்ப்பாளர்கள் ஓலை
குடிசைகளாகவே இருந்த
அந்த ஊரையும் மறைமுகமாக
அடிக்கடி தீ வைத்து எரித்தனர்!

இதையெல்லாம் பார்த்த
தாவீது சுந்தரானந்தம்,
அந்த ஊரையும், ஆலயத்தையும் பாதுகாக்க,
ஊரிலுள்ள இளைஞர்களுக்கு, சிலம்பாட்டம் என்ற வீர விளையாட்டை
கற்றுக் கொடுத்து,

#தடிகம்புசேனை
(சிலம்பாட்டம்)
உருவாக்கினார்!

எமது ஊர் மக்களுக்கு,
கடவுள் பக்தியுடன் கூடவே வீரத்தையும் கற்றுக் கொடுத்தது அந்நாளில் தேவையான சிறப்பு அம்சம்!

நேருக்கு நேர் தாக்க முடியாத நயவஞ்சகர்கள்,
சின்னமுத்து என்ற தாவீது சுந்தரனாருக்கு,
சாப்பாட்டில் விஷம் வைத்து, 1806ம் ஆண்டு அவரைக் கொன்று, பழி தீர்த்தனர்!

தமது 34 வயதிலேயே...

தென் மாவட்டத்தின் முதல் இரத்த சாட்சியாக அவர் மரித்தார்!

இல்லை இல்லை
விதைக்கப் பட்டார்!

இன்றைக்கு,
அந்தப் பகுதி முழுவதுமே
கிறிஸ்துவை தங்கள் சொந்த
இரட்சகராக ஏற்றுக் கொண்ட
ஜனங்களால் நிரம்பி இருக்கிறது!

ஒரேயொரு சின்னமுத்து என்ற
தாவீது சுந்தரனாரைக் கொன்று,

அழித்து, ஒழித்து விட்டோம் என்று நினைத்த எதிராளிகளின் கண்கள் காண...

இன்று லட்சோப லட்சம்
தாவீது சுந்தரனார்கள் அந்தப்
பகுதி முழுவதிலும் நிரம்பி இருக்கிறார்கள்!

#தேவனுக்கே_மகிமை!

No comments