World News

பெந்தேகொஸ்தே போதகர் லாசரஸ் மலாவி தேச ஜனாதிபதியானார்

Summary

Share this page with friends

Share this page with friendsதென்கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவி நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் பெந்தேகொஸ்தே போதகர் லாசரஸ் சக்வேரா அவர்கள் வெற்றிபெற்று இந்த 2020 ஜூன் மாதம் 28ம் தேதி புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார். இதனை வறலாற்று சிறப்புமிக்க வெற்றியாக ஊடகங்கள் அறிவித்துள்ளது. “ஒரு நாள் தேவன் என் இருதயத்தோடு பேசினார், நான் […]

Share this page with friends

தென்கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவி நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் பெந்தேகொஸ்தே போதகர் லாசரஸ் சக்வேரா அவர்கள் வெற்றிபெற்று இந்த 2020 ஜூன் மாதம் 28ம் தேதி புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார். இதனை வறலாற்று சிறப்புமிக்க வெற்றியாக ஊடகங்கள் அறிவித்துள்ளது.


“ஒரு நாள் தேவன் என் இருதயத்தோடு பேசினார், நான் உனது ஊழியத்தை விரிவுபடுத்துகிறேன். இதனால் நீ ஒரு முழு தேசத்திற்கும் போதகராயிருந்து ஊழியம் செய்ய முடியும்” என்று போதகர் லாசரஸ் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு குறிப்பிட்ட காணொளியில் பேசியிருந்தார்.


யார் இந்த போதகர் லாசரஸ் சக்வேரா?

தற்போது 65 வயதை உடைய ஜனாதிபதி லாசரஸ் அவர்கள் தத்துவம் மற்றும் இறையியலில் பட்டங்கள் பெற்றவர். உலகளாவிய இறையியல் விரிவுரையாளர். மேலும் உலகளாவிய பெந்தேகோஸ்தே அமைப்பான அசெம்பிளிஸ் ஆப் காட் இயக்கத்தின் மலாவி தேச முன்னால் பொது தலைவராக  1989 முதல் 2013 வரை பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


தற்போதைய ஜனாதிபதி மற்றும் போதகர் லாசரஸ் அவரது மனைவியின் பெயர் மோனிகா. இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர்.

தேசத்தை கடவுள் விரும்பும் வழியில் நடத்த கடவுள் பயமிக்கவர்கள் ஆளுகைக்கு வர வேண்டும் என்று ஜெபித்த ஜெபம் கேட்கப்பட்டதாக மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தேவனுக்கே மகிமை..! 

https://www.youtube.com/watch?v=x1nDSM3lQWE
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *