மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறுவதற்கான விதிமுறைகள் :

மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறுவதற்கான விதிமுறைகள் :

  1. சிறிய சபைகள் திறக்கலாம் என அனுமதி வந்துள்ளது, ஆகவே சிறிய சபை என நிரூபிக்க ஆண்டு வருமானம்
    ₹10,000/- இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது, வருடத்திற்கு ₹10,000/- என்றால் மாதம் ₹833/- மட்டும்தான் வருமானம் என நிரூபிக்கவேண்டும்.
  2. வருமானத்தை நிரூபிக்க வேண்டுமானால், சபையின் வங்கி கணக்கு 6 மாத ஸ்டேட்மெண்ட் சமர்ப்பிக்க வேண்டும்
  3. சபையின் ஆண்டு வருமான கணக்கு தணிக்கை (Audit) செய்யப்பட்டு சமர்ப்பிக்க வேண்டும். தணிக்கை (Audit) செய்யப்பட வேண்டுமானால் சபை அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டு 12 AA சான்றிதழ் (Income tax exemption certificate) பெறப்பட்டிருக்க வேண்டும்
  4. ஸ்தாபனத்தில் கீழ் செயல்படும் சபைகள் அதற்குரிய அங்கீகாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்
  5. சபை நடத்தப்படும் கட்டிடம் சொந்தமானதாய் இருந்தால் அதற்குரிய ஆவணங்களும், வாடகை என்றால் வாடகை ஒப்பந்தப்பத்திரமும் சமர்ப்பிக்க வேண்டும்
  6. சபை நடத்தும் போதகருடைய இறையியல் படித்ததிற்கான சான்றும் சமர்ப்பிக்க வேண்டும்

இந்த மேற்கூறிய ஆவணங்களை இணைத்து மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று சபை நடத்திக் கொள்ளலாம்.
ஆகஸ்ட் மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு அடைப்பாகையால் அதையும் கருத்தில்கொண்டு வார நாட்களில் நடத்தலாம்.

Share this page with friends