நீங்க செய்த நன்மைக்கு ஈடாய்

நீங்க செய்த நன்மைக்கு ஈடாய்
என்ன செய்வேன் என் தெய்வமே

1) தாயின் கருவில் உருவாகும்
முன்னமே நீர் அறிந்தீர்
தாயை போல ஆற்றி தேற்றி
அரவனைத்து மகிழ்கின்றீர்

2) கடந்த நாட்கள் முழுவதும்
உமது இரத்தம் காத்தது
இல்லையென்று சொலலாது
உதவி செய்து வந்தது

3) பிறந்த நாள் முதற்கொண்டு
இந்த நாள் வரையிலும்
ஆதரித்து வந்தீர் அதிசயம் செய்தீர்

4) ஜெபிக்க உதவி செய்தீர்
வேதம் தியானிக்க உதவி செய்தீர்
கொடுக்க உதவி செய்தீர்
உமக்காய் வாழ கிருபை தந்தீர்

Pages