நீங்க செய்த நன்மைகளை

நீங்க செய்த நன்மைகளை
நினைத்துப்பார்க்கிறேன்
கண்ணீரோடு நன்றி சொல்லி
துதித்து மகிழ்கிறேன்

உடைக்கப்பட்ட போது
உடனிருந்த தெய்வம்
மரண பள்ளதாக்கில்
கரம்பிடித்த தெய்வம்

சோர்ந்துபோன நேரம்
சூழ்ந்து கொண்ட தெய்வம்
தடுமாறும் நேரம்
தாங்கி கொண்ட தெய்வம்

பலர் சபித்து தூற்றும் நேரம்
ஆசீர்வதித்த தெய்வம்
கன்மலை மேல் நிறுதி
உயர்த்தி வைத்த தெய்வம்

பெலனிழந்த நேரம்
கிருபை கூர்ந்த தெய்வம்
ஒன்றுமிலலா நேரம்
எனக்குதவி செய்த தெய்வம்

பெலனிழந்து உருவிழந்து
களைத்து நின்ற போது
தகப்பனாக வந்து
தாங்கி அணைத்தீரே

நல்லவரே வல்லவரே
நன்மைகளின் காரணரே

Pages