400 சேக்கல் வெள்ளி வரலாற்று விளக்கம்

ஆபிரகாமின் 400 சேக்கல் வெள்ளி வரலாற்று விளக்கம்.

Pastor N.Santhosh Kumar. Apostolic Church, Thirukovilur. Vp(dt).

போதகர் (Fb நண்பர்) ஒருவர் என்னிடம் சேக்கலைப் பற்றி கேட்ட கேள்விக்கான பதில்.

ஆதி23:16  அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் புத்திரருக்கு முன்பாக எப்பெரோன் சொன்னபடியே, வர்த்தகரிடத்தில் செல்லும்படியான நானூறு சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக் கொடுத்தான்.

ஒரு தராசு தட்டின் ஒரு பக்கத்தில் 244 கோதுமை மணிகளும், இன்னொரு பக்கத்தில் வெள்ளியையும் வைத்தால் என்ன அளவோ அது 1 சேக்கல் அதாவது 17 கிராம் வெள்ளி மெசப்படொமியன் அளவு. அதாவது அடர்த்தியுள்ள  வெள்ளி.

அப்படியென்றால்  400X17=6.8 (6 கிலோ 800 கிராம்) ஆபிரகாம்  சாராளை அடக்கம் செய்ய தன்னுடைய 137 வயதில்  மக்பேலா குகையை வாங்கினது ஏறத்தாழ 7kg  வெள்ளி ஆகும்.

அமெரிக்க டாலர் மதிப்பின் படி
1 சேக்கல் என்பது 32டாலர்
400x32= 12,800.00 டாலர்.
(தற்கால இந்திய மதிப்பின் படி (8,96,000)

தன் மனைவியை அதிகம் நேசித்தவன் ஆபிரகாம். ஆனால் அதை வெளி காட்டவில்லை சாராளுடைய அடக்கத்தில் அதை வெளிகாட்டுகிறான்.

எபேசி5:28  அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.

Thank you all God bless you
Pastor N.Santhosh Kumar. Apostolic Church, Thirukovilur. Vp(dt).

Pages