Recents in Beach

header ads

நடனம் என்பது புதிய ஏற்பாட்டு சபைகளுக்கு இல்லை ஏன்?

நடனம் என்பது புதிய ஏற்பாட்டு சபைகளுக்கு இல்லை ஏன்? ARTICLE BY

Pastor N.santhoshkumar, Life-giving Apostolic mission church, (estd 1996) Thirukovilur, villupuram dt, cell:9976516252

என்னுடைய தாத்தா நல்ல ஒரு போதகா் (1958-2001) அவருடன் என்னுடைய சிறிய வயதிலிருந்து சபைக்கும் பரிசுத்தவான்கள் பலருக்கும் பணிவிடை செய்தவன். அக்கால சபையில் அதாவது 1985 ஆண்டு வாக்கில் ஆராதனை என்ற வார்த்தைகளை பாடல் வரிகளில் நான் கேள்விப்பட்டது இல்லை 8 அடி பல்லவி கொண்ட பாடல்கள் 4 பாடுவார்கள் அவ்வளவுதான் அதற்கு side drum வாசிப்பது நான். இதில் பல பேய்கள் ஓடும் இதுதான் அக்கால ஆராதனை. ஆனால் இன்றைக்கு இயேசு என்ற வார்த்தை பதிலாக ஆராதனை வார்த்தை அதிகம் பயன்படுகிறது. நடனத்திற்கும் ஆராதனைக்கும் சம்பந்தமில்லை பழைய ஏற்பாட்டில் நடனம் ஆடினவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஆடினார்கள். ஆனால் புதிய ஏற்பாட்டு சபையில் அந்த நினைவு கூட இல்லை. அப்போஸ்தலர்களோ, விசுவாசிகளோ ஆடினதாக சரித்திரம் இல்லை.
”நடனம்” என்ற வார்த்தைக்கு எபிரெய பதம் Heb: Machol – Round dance “ வட்ட நடனம்”

1.இன்றைக்கு சபையில் நடனம் அனுமதிக்க காரணம் என்ன?
எல்லா ஆராதனை நடத்துகின்ற ஊழியர்களுக்காக ஆண்டவருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். அவர்கள் நம் சபைகளுக்கு தேவை. ஆனால் ஜனங்களை வாலிபர்களை பிரியப்படுத்தி ஆடுவது பாவம்.

1.ஒருவர் வேதத்தில் எந்த பகுதியிலிருந்து போதித்தாலும் புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்களுடைய உபதேசத்தையும் கிறிஸத்துவின் உபதேசத்தையும் கவனிக்க வேண்டும். ஒருவா் போதிக்கின்ற காரியத்தை குறித்து இயேசு என்ன சொன்னார் என்பதில் முடிக்க வேண்டும். ஆகவே ஜனங்களை கிறிஸ்த்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்க செய்யவேண்டும். இன்னும் சபை கிறிஸத்துவின் உபதேசத்தை வலியுறுத்தி போதிக்காத காரணம்

2யோ1:9  கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.
2 jhon 1;9 Whosoever transgresseth, and abideth not in the doctrine of Christ, hath not God. He that abideth in the doctrine of Christ, he hath both the Father and the Son.

2.நடனத்திற்கு கூறும் காரணங்கள்
 
1.தாவீது நடனம் ஆடினார்.
2. செத்தவனுக்ககாக ஆடுகின்றார்கள்           நாம் ஏன்? நாம் ஏன் உயிருள்ள தெய்வத்திற்கு ஆட கூடாது.

முதலாவது வேதத்தில் இருக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் செய்து விட முடியாது. (எகா. பேதுரு மல்குஸின் காதை வெட்டினார் என்பது வேதத்தில் உள்ளது அதற்க்காக எல்லாருடைய காதையும் வெட்ட முடியுமா?) அது தேவனுடைய நேரடி கட்டளையா? அல்லது மறைமுக கட்டளையா? என்பதை ஆராயந்து பார்க்க வேண்டும். தாவீதின் நடனம் தனிப்பட்ட விஷயம் Personal matters. ஆகவே அதை உபதேசமாகவோ கட்டளைகளாகவோ ஆக்க முடியாது.
நடனத்துடன் ஆராதனை செய்யுங்கள் என்று தாவீது எழுத காரணம் அது யுத மதத்தின் மக்களுக்கு தன் விருப்பத்தை எழுதுகின்றார். இன்றைக்கும யுத மதத்தில் நடனம் உண்டு. யுத மதத்தின் தாவீது நடனம் ஆடினார் என்று சொல்லி நடனம் ஆடுகின்றவர்கள்.  10 மனைவிகளை திருமணம் செய்த தாவீதை என் இருதயத்திற்கு ஏற்றவன் என்று கரத்தா் கூறுகின்றார் அதற்க்காக இன்றைய புதிய ஏற்பாட்டு ஆராதனை வீரா்கள் 10 மனைவிகளை திருமணம் செய்யமுடியமா? வேதத்தில் உள்ளது என்பதற்க்காக. ஜனங்கள் ஏற்றுக் கொள்வார்களா? 
ஆகையால் இயேசு என்ன கிறிஸ்த்தவ மார்க்கத்தின் கொள்கைகளை கூறினார் என்பதை கவனியுங்கள் தாவீது அல்ல கிறிஸ்த்தவ மார்கத்தின் தலைவர் இயேசு தான் தலைவா். மட்டுமல்ல அவர்தான் நம்முடைய திரித்துவ தேவன்.

3. நடனம் பாவத்திற்குள் வழி நடத்துகிறது. எப்படி?
சத்தான் எப்பொழுதும் நேரடியாக தாக்காமல் மறைமுகமாக தாக்குவான்.
வேதத்தை ஆராய்ந்து பார்த்தால் நடனத்திற்கு பிறகு சிலருடைய வாழ்க்கை பரிதாபமாக முடிவடைந்துள்ளது. தாவீதின் நடனம் பாவத்திற்குள் சென்றது. ஊசாய் மரித்தான். மிரியாம் குஷ்ட்டரோகியானாள்.

இன்றைய நடனம் எப்படி இருக்கிறது? கோயர் டீம் (Choir Team) வாலிப பி்ள்ளைகளை மேடையில் முன்னாக வரிசையாக நிற்க வைத்து பாட வைப்பது தவறில்லை. ஆனால் எகிறி குதித்து குதித்து ஆடினால் இதை பார்க்கின்ற இளைஞர்கள் இடறல் அடையமாட்டார்களா? தலைவர்களே தயவு செய்து வாலிப பிள்ளைகளை மேடையில் பலி பீடத்தில் நடனம் ஆட அனுமதிக்காதீர்கள் பாவம் பெருகிவிடும். இடறல் உண்டாகும்.

4.நடனத்தை குறித்து ஆச்சர்யமான சில விஷயங்கள்.
1. அது தேவ கட்டளையில்லை. நடனம் ஆடுங்கள் என்று எங்கும் தேவன் கட்டளை கொடுக்க வில்லை.

2. ஒரு காலத்தில் ஆராதனை வீரனாக இருந்த  சாத்தானே நடனம் ஆடவில்லை.

3.அவ்வளவு மகிழ்ச்சி நிறைந்த பரலோகத்திலே நடன ஆராதனை இல்லை.

4. இயேசு உலகமெங்கும் போய் வாலிபர்கள் இரட்ச்சிக்க பட குத்தாட்டம் போடுங்கள் என்று கூறவில்லை சுவிசேஷம் அறிவியுங்கள். என்று கூறினார். தயவு செய்து சுவிசேஷம் அறிவிக்கும் போது குத்தாட்டம் போடாதீர்கள்.

5. நடனம் பழைய ஏற்பாட்டின் காலத்தோடு முடிந்து போன ஒன்று. நடனம் பண்ண ஒரு காலம் உண்டு.

6..நாம் நடனம் பண்ணக்கூடிய காலத்தில் இல்லை. நாம் தெரு தெருவாய் சென்று ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணக்கூடிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

புதிய ஏற்பாட்டின் மகிழ்ச்சி நடனத்தில் அல்ல ஒரு மனிதன் மனம்திரும்புவதில் உள்ளது. ஆத்துமாக்களை சந்தித்து திடப்படுத்துவது நம்முடைய கடைசி கால வேலை.
இரத்த சாட்சிகளைாய் மரிக்கின்ற ஊழியா்களுடைய காரியங்களுக்கு ஆதரவு கொடுத்து அவர்களுடைய துக்கத்தை பகிர்ந்து கொள்ளக்கூடிய காலம். நம் கண் முன்னே ஊழியர்கள் எரிக்கப்படுவதை மறந்து ஆடக்கூடிய காலமும் இல்லை இது நேரமும் இல்லை. மற்ற அவயவங்களும் பாடுபடும் அல்லவா.

7.நடனம் என்பது ஒரு உடற்பயிற்ச்சி.

5.நடனம் ஆடலாம் யார்? எங்கே? எப்பொழுது நடனம்? உபதேசம் அல்ல ஆலோசனை. நான் நடனத்திற்கு எதிரி அல்ல இச்சையை தூண்டும் பாவத்திற்கு நேராய் நடத்தும் நடனத்திற்கு எதிரி

1.சிறுவர்களின் மகிழ்ச்சிக்காக 2..சிறுபிள்ளைகள் மற்றும்
3.ஆண்கள்.
வயது வந்த பெண்பிள்ளைகள் சபைக்கு முன் நடனம் ஆடுவது அவ்வளவு சரியாக இருக்காது.
2. கிறிஸ்மஸ் மற்றும் சில நிகழ்ச்சிகள்.
3.நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்கும் ஜனங்களுக்கு 1 நிமிடம் உடற் பயிற்ச்ச

முடிவுரை:

இரட்ச்சிப்பு கர்த்தருடையது. நடனத்திற்குரியது அல்ல. மக்களை சபைக்குள் இழுப்பதற்கு அல்லது தக்க வைப்பதற்கு நடனத்தை பயன்படுத்த வேண்டாம். Album போடுங்கள்"தவறில்லை ஆனால் ALBUM and CONCERT AND live worship இது அல்ல ஊழியம். இன்னும் அநேக விஷயங்கள் உண்டு. மீண்டும் தொடரும். நன்றி.
PASTOR N.SANTHOSH KUMAR. LIFE GIVING-APOSTALIC CHURCH . CELL:99 76516252.

Post a Comment

0 Comments