middle ad

பாபிலோனிய சால்வை

“நேர்த்தியான பாபிலோனிய சால்வை” (Goodly Babylonish garment) 

எச்சரிக்கை மற்றும் ஆராய்ச்சி கட்டுரை. ஆழாமான, அருமையான சத்தியம் மற்றும் பிண்ணனியம் (Backround)
Pastor N.Santhosh Kumar. Cell:9976516252.

யோசுவா 7:21 கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும்……...

1.பாபிலோனிய சால்வை--Mandle (Goodly Babylonish garment)  இரண்டு வகையில் இருக்கின்றது. 1.ராஜாக்களின் சால்வை, மற்றொன்று 2.பாபிலோனிய ஆசாரியர்களின் சால்வை. பாடத்தில் காண்கிற படி ஆகானுக்கு கிடைத்தது ராஜாக்களின் சால்வை ஆகும். இவைகள் ஆட்டுமயிர், மற்றும் சணல் நுால் பஞ்சுநுால், மற்றும் பாபிலோனில் ஊதா கலரில் புக்கும் ஒருவகை இயற்கை செடியை கொண்டு வண்ணம் ஏற்றப்பட்டு தயாரிக்கப்பட்டு தங்கத்தை கொண்டு பார்டர் செய்யப்பட்டதாகும். மொத்ததில் ஊதா கலர் மற்றும் தங்கசரிகை கொண்டது ஆகும் சுருக்கமாக எழுதியிருக்கின்றேன். சுமோரியர்கள் இயற்க்கையை கொண்டும் ஆடைகளை தயாரிப்பார்கள்.

2.இந்த சால்வையானது பாபிலோனிய மதத்தின், கடவுள்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகும். மேலும் இது “நிம்ரோது” கட்டின “பாபேல் கோபுரத்திற்கு சமமாக பார்க்கப்பட்டதாம். இது அக்காலத்திலே இது மிக ஆடம்பரமான சால்வையாக பார்க்கப்பட்டது. இந்த சால்வை ஒருவன் அணிந்திருந்தால் மிக மதிப்புமிக்கவனாகவும், கௌவுரவம் மிக்கவானாகவும் காணப்படுவானாம்.

3.எப்படி இந்த சால்வை எரிகோவிற்கு வந்தது?
யுத ரபிகளுடைய விளக்கவுரையில் Jewish Bible Commentary. ரபி Rashi on Joshua. கூறுகின்றார். அநேக ராஜாக்காளால் விரும்பப்பட்ட ஒரு பகுதிதான் இந்த எரிகோவாம். செழிப்பு மிக்க பகுதி அக்காலத்தில் இஸ்ரவேல் மக்கள் குடியேறுவதற்கு முன் பாபிலோன் ராஜாக்களுக்கு இங்கு ஒரு அரண்மை (PALACE)  இருந்தது எனவும், அவர் வரும் போதெல்லாம் இந்த நேர்த்தியான சால்வைகளை அணிவது வழக்கம் எனவும் தம்முடைய விளக்கவுரையில் கூறுகின்றார்.ஆகவே அவர்கள் அதை அங்கே விட்டு சென்றிருக்கலாம்.

4.ஏன் திருடினான்?
   Midrash Tanchma Buber-  என்ற யுத ரபிகளுடைய இலக்கியத்தில் ஒரு ரபி இப்படியாக கூறுகின்றார். யோசுவா அவனை பார்த்து கேட்கின்றான். யோசுவா7:11. மகனே நீ  எனக்கு செய்ததை சொல் என்று கூறினான் அதற்கு அவன்

உபா 20:14-ல்- ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அனுபவிப்பாயாக.
கூறுகின்ற வசனத்தை எடுத்து காட்டி இதன் படி தான் நான் செய்தேன் என்றும், இனி மேல் என்னை ஏழை என்றும் தரித்திரன் என்றும் கூறாதீர்கள். இன்று முதல் யுதா கோத்திரத்தில் என்னைவிட பெரும் பணக்காரர்கள் இருக்க முடியாது என்றும் கூறினானாம். தன்னை பெரும் பணக்காரனாக காட்டுவதற்கு திருடினான். என்று யுத ரபி தங்களுடைய விளக்கவுரையான Midrash-ல் கூறுகின்றார்.

5.ஏன் சாபத்தீடானது?
A. உபா 22;11-ஆட்டுமயிரும் பஞ்சுநுாலும் கலந்த வஸ்திரத்தை உடுத்திக்கொள்ளாயாக. இந்த பாபிலோனிய சால்வை அப்படிபட்ட சாபத்தீடான சால்வை.கலப்பட சால்வை நியாயபிரமாணத்தின் சட்டத்திற்கு எதிரானது எல்லாமே சாபத்தீடானது. ஆகவே இது தீட்டானது.

B.வெள்ளியும், பொன்னும் தேவனுடைய ஆலயத்திற்கு சேர வேண்டியதை தன் கூடாரத்தில் மறைத்து வைத்ததினால் அதுவும் சாபதீடானது.

6. இன்றைக்கு இந்த சால்வை தான் வேறு ரூபத்தில் இரண்டு பக்கத்திலும் பட்டை சால்வையில் சிலுவை போட்டு கிறிஸ்த்தவ மார்க்கத்தில்   அநேக கழுத்துகளின் மேல் தொங்கி கொண்டிருக்கின்றது. இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். நீங்களும் சிந்தியுங்கள்.
இன்னும் பல முத்துக் குவியல் நிறைந்த பகுதி இது ஆனாலும் இத்துடன் இந்த கட்டுரையை முடிகின்றேன். கா்த்தருக்கு சித்தமானால் அடுத்த ஆராய்ச்சி கட்டுரையின் மூலம் சந்திகின்றேன். எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.

7. இந்த பகுதியை ஆராய்வதற்கு கடினமாக இருந்தாலும், அதிக மணி நேரங்கள் ஆனாலும் இந்த ஆழமான சத்தியத்திற்குள் வழி நடத்தின சத்திய ஆவியானவரை திரியேக தேவனை மனதார துதிக்கின்றேன். வாசித்த அனைத்து தேவ பிள்ளைகளுக்கும் நன்றிகள். பிரயோனமாய் இருக்குமென்றால் அநேகருக்கு பகிருங்கள் இது கடைசி காலம் என்று உங்களுக்கே தெரியும். ஆகவே அதிகமாய் சத்தியத்தில் வளருங்கள், போதியுங்கள்.  பிழைகளுக்கு மன்னிக்கவும்.

Pastor N.Santhosh kumar. Cell:9976516252.

8.ஆராய்ச்சி குறிப்புகளுக்கு உதவின புத்தகங்கள்.
1.Ancient Mesopotamians Clothings
2.The Assyrians an Babylonians. Page 71.
3.Midrash.
4.Jewish Encyclopedia
5.Jewish Rabbinicle Litrature.
6. Jewish Rabis Bible Commentary.

Similar Videos