middle ad

பாவ நிவர்த்தி

*பாவ நிவர்த்தி ( THE ATONEMENT)*

பரிசுத்த வேதாகமத்தில் " *பாவநிவர்த்தி* " என்னும் "வார்த்தை" புரிந்து கொள்வதற்கு சற்று கடினமான ஒரு வார்த்கதையாகும்.  குறிப்பாக பழைய ஏற்பாட்டில் " *மூடுதல்* " என்ற அர்த்தத்தை உடைய சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.  யாத்திராகமம், மற்றும் லேவியராகமம் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள பழைய ஏற்பாட்டு பலிகள் பாவத்தை " *மூடுதல்* " அல்லது *"நிவர்த்தி செய்தல்"* என்றே கூறப்படுகிறது.  *இந்த பலிகள்  பாவத்தைச் சீர் செய்யும் செயலுக்கு விளக்க முறைகளாகவே  இருந்தன* .
*இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் உண்டாகும் பாவமன்னிப்பைக் குறிப்பதாகவே* இந்தப் *பதம்* உள்ளது.  *கடவுளின் நீதி,  சட்டங்களின் எதிர்ப்பு அனைத்தும் இயேசு கிறிஸ்துவினால் திருப்தியானது.* *முதலாவது அவரது கீழ்ப்படிதலுள்ள வாழ்வினாலும்* *இரண்டாவதாக, 'பாவத்தின் சம்பளத்தை' சிலுவை மரணத்தில் தாம் அனுபவித்த பாடுகளின் மூலமாகவும் மனிதனின் பாவத்தை நிவர்த்தி செய்தார்.*

*மனிதனின் பாவத்திற்குக் கடவுளின் பதில் தான்* *"பாவ நிவிர்த்தியாகும்",* மனிதனின் பாவத்தையும் குற்றமுள்ள மனசாட்சியையும் போக்குவதற்கான *ஒரே வழி அல்லது பதில்* ஆகும்.  கிறிஸ்துவின் மரணத்தினால் உண்டான பலனைப்  பற்றிய வேத போதனையை " *பாவநிவர்த்தி* " *கடவுளின் முன் ஆலோசனைப்படி தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார்,* (அப்போஸ்தலர் 2: 23 ;1பேதுரு 1 :20).  *தமது அளவற்ற அன்பினால் இதைச் செய்தார்* ( யோவான் 3:16; ரோமர் 5:18).  *கடவுள் நம்மீது அன்பு செய்திராமலிருந்தால், அவரது குமாரனை பாவம் நிவர்த்தியாக இவ்வுலகிற்கு அனுப்பியே இருக்க மாட்டார்.*

*பழைய ஏற்பாட்டில் இயேசுவின் மரணம் குறித்து :*
இயேசுவின் மரணத்திற்கான காரணத்தை பழைய ஏற்பாட்டில் பல  நிகழ்வுகளின் மூலமாக தேவன் வெளிப்படுத்துகிறார் ஆதியாகமம் 22ம் அதிகாரத்தில் *ஈசாக்கை பலி செலுத்தும்   ஒரு சம்பவத்தை காண்கிறோம்.  ஆனால் கடவுளே ஒரு ஆட்டுக்கடாவைக் கொடுத்ததினால் ஈசாக்கு காப்பாற்றப்படுகிறான்.*  யாத்திராகமம் 12ம் அதிகாரத்தில் *பாஸ்காவின் சம்பவம்,  கடவுளின் பிள்ளைகளை மரணத்தினின்று ஓர் ஆட்டின் மரணம்  காப்பாற்றுகிறது.*  வசனம் 13 ல்  *"அந்த ரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்து போவேன்" அதாவது என் நியாயத்தீர்ப்பு உங்களை தொடாது இதை* அப்போஸ்தலனாகிய பவுல் ( 1 கொரிந்தியர் 5:7)ல் " *நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே"*  என்கிறார்.

பழைய ஏற்பாட்டில் லேவியராகமம் 16 ஆம் அதிகாரம் 21 22 வசனங்களில்.  *பிரதான ஆசாரியன் போக்கு ஆட்டின் தலையில் தன் கைகளை வைத்து மக்களின் பாவங்களை அறிக்கையிடுகிறான். பழுதற்ற ஆட்டின் மீது பாவம் சுமத்தப்படுகிறது.*

இவை அனைத்தும் மாபெரும் உண்மைகளை  நம் முன் கொண்டு வருகிறது; *இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தபோது, இது ஒரு* ' *பதிலாள்* " மற்றும் ' *கிருபாதாரபலி* ' ஆகும்.

*பதிலாள் ( SUBSTITUTION )*
கீழ்க் கண்ட வசனங்களை கவனமாக சிந்தியுங்கள் :

1) *"கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்."*
ஏசாயா 53:6

2) *"அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்."*
1 பேதுரு 2:24

3) *" நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்."*
2 கொரிந்தியர் 5:21

*கிருபாதார பலி ( PROPITIATION)*

" *கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்.* "(ரோமர் 3:26)  *கடவுளின் சட்டத்தை நாம் மீறினதால் உண்டான தேவ கோபாக்கினையின் தண்டனையை சிலுவையில் நமக்கு பதிலாக இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு நியாயப்பிரமாணத்தின் கடனை முற்றிலுமாக சுமந்து தீர்த்தார். ஆகவே தான் நம் இரட்சகர்  சிலுவையிலே என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என கதறுகிறார்* ( மத்தேயு 27:46).  *கிறிஸ்து நம் பாவத்தைச் சுமந்ததினால், பிதாவாகிய கடவுள் தமது குமாரனையே கைவிட்டார். "* *பாவமறியாத அவர்* " என ( 2  கொரிந்தியர்5:21) வாசித்தோம். " *நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்,"* (ஏசாயா 53:5).
சகரியா 13:7 ல்  உள்ள பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் சிலுவையிலே நிறைவேறிற்று. *"பட்டயமே, என் மேய்ப்பன் மேலும் என் தோழனாகிய புருஷன் மேலும் எழும்பு... மேய்ப்பனை வெட்டு...."* *இப்பட்டயம் நியாயத்தீர்ப்பின் பட்டயம்* இந்த வார்த்தையை தன்னை குறித்து தான் எழுதி உள்ளது என *இயேசு கிறிஸ்து மத்தேயு 26:31 குறிப்பிட்டார்.*

சுருங்கக் கூறின், கல்வாரிச் சிலுவையிலே பரிசுத்த கடவுளின் நீதியை நிறைவேற்றியும் கடவுளின் சட்டத்தை உடைத்துப்போட்ட பாவிகளாகிய நம்மை மீட்டெடுத்தும் கடவுளின் பரிசுத்த நீதியை கிறிஸ்து சிலுவையில் நிலைநாட்டினார்...

Similar Videos