அரிமத்திய ஊரானாகிய யோசேப்பு

“அரிமத்திய ஊரானாகிய யோசேப்பு"    சகோதரன் ஜான் ஜெபராஜ் அவர்களுக்கு.......
மத் 27:57  ஏன்? இயேசுவின் சரீரம் இவனிடம் ஒப்படைக்கப்பட்டது. 24/11/2018.
போதகர் N. சந்தோஷ்குமார். திருக்கோவிலுார். செல்:9976516252. விழுப்புரம் dt. T.N.India

அன்பு சகோதரன் ஜான் ஜெபராஜ் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள் சபைகளில் திரளான மக்களுக்கு முன் பேச தேவன் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை தந்திருக்கிறார்.  சரியான சத்தியத்தை சொல்லி வாய்ப்பை பயன்படுத்துங்கள் என்று வேண்டுகின்றேன். ஆகவே சத்தியத்தை ஆயத்தம் செய்து போதித்தால் தவறான வியாக்கியானங்கள் வர வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். தொடர்ந்து படியுங்கள் அவருக்கு மாத்திரமல்ல வாசிக்கிற அனைவருக்கும் இந்த பதிவு.

யுத சட்டத்தின் படி ஒரு குற்றவாளி சரீரம் கூட மரத்தில் இரவு முழுவதும் தொங்க கூடாது. அந்த நாளில் தானே புதைக்கபடவேண்டும். (உபாக 21:22-23). மறுநாள் ஓய்வுநாள் சடலத்தை கேட்க முடியாது. என்பது குறிப்பிடதக்கது.

ரோம சட்டத்தின் படி குற்றவாளிகளின் உறவினர் யாராவது சரீரத்தை கேட்டு பெற்றுக்கொள்ளலாம். ஆனால் யாரும் கேட்கவில்லையென்றால் அதை அப்படியே ரோம வேட்டை நாய்களுக்கு விட்டு விடுவார்கள்.

ஆனால் இயேசுவின் உறவினர்கள் யாரும் கேட்க முன் வரவில்லை அவர்கள் ஏழை என்பதினால் அல்ல அவர்கள் அனைவரும் கலிலேயாவை சேர்ந்தவர்கள் என்பதினால். ஆகவே அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு  மட்டுமே இயேசு அறையப்பட்ட மாகணத்தை சேர்ந்தவன். மாத்திரமல்ல அவனிடம் மட்டுமே யாரும் அடக்கம் செய்யாத புதிய கல்லறை இருந்தது. அதிலே இயேசுவை அடக்கம் செய்ய அனுமதிக்கேட்டான். ஆகவே பிலாத்து அனுமதித்தான். இவைகள் எல்லாம் தீர்க்கதரிசன நிறைவேறுதல்.

மேலும் இவன் யுத ஆலோசனை சங்கமாகிய சனகெரிப் சங்கத்தின் 70 உறுப்பினர்களில் ஒருவன். (Mar15:43) எல்லோரும் இயேசுவை அறைய அனுமதித்த போதும் இவன் அனுமதி கொடுக்கவில்லை.(Luk 23:51)ஆகவே அதை வெளிப்படுத்துவதற்காகவும் இதை செய்தான். ஆகவே தான் “துணிந்து போய்” என்ற வார்த்தை வசனத்தில் வருகின்றது.

இவன் பணக்காரன் என்பதினால் அல்ல தேவன் இவனிடம் இயேசுவின் சரீரத்தை ஒப்புகொடுக்கவில்லை.இவன் இயேசுவின் உண்மையான மறைமுக சீடன் என்பதினால் தேவன் இவனிடம் ஒப்படைத்தார்.(Mat 27:57)
(John19:38)

ஒருவேளை இயேசு அறைப்பட்ட மாகணத்தை சேர்ந்த ஏழ்மையான உறவினார்கள் யார் போய் கேட்டிருந்தாலும் இயேசுவின் சரீரத்தை கொடுத்திருப்பான் பிலாத்து.

இயேசு உயிர்ந்தெழுந்த பிறகு அரிமத்தியா ஊரானாகிய பணக்கார யோசேப்பை தேடி போய் நன்றி சொல்லாவில்லை. மாறாக மறுதலித்த தரித்திரனாகிய பேதுருவுக்கு கடற்கரையில் சுட சுட மீன்களை பொறித்து காத்திருந்தார் என்பது இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்பு.
வாசித்த அனைவருக்கும் நன்றி.

உங்கள் சகோதரன்
போதகர் N. சந்தோஷ்குமார். திருக்கோவிலுார். செல்:9976516252.

Pages