குயகலத்தை போல் அவர்களை உடைத்து போடுவீர்.

குயகலத்தை போல் அவர்களை உடைத்து போடுவீர். (சங்2:9) என்றால் என்ன? Intersting Backround.

PR. N.SANTHOSH KUMAR. 21/11/2018.
THIRUKOVILUR. VP(DT). T.N. INDIA.

இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார். சங்2:9

இதனுடைய பிண்ணனியம் (BACKROUND) என்ன? எகிப்திய ராஜாக்கள் தாங்கள் பதவியேற்ற ஆளுகை நாளை கொண்டாடுவது வழக்கம். அப்பொழுது எதிரிநாட்டு எதிகளின் பெயர்களை திரளான பானைகளின் மேல் எழுதி இரும்பு கோலால் பானைகளை நொறுக்கி போடுவார்கள்.  இது  எதிரியை ஜெயித்துவிட்டோம் என்ற அடையாளத்திற்க்காக செய்யபடுவது வழக்கம். எகிப்தியர்கள் அடிமைகளை இரும்பு  கோலால் தாக்குவதும் வழக்கம். 
அசீரிய நாட்டு ராஜாக்களும் அப்படியே பானைகளை நெறுக்கி கொண்டாடுவார்களாம். 

மேலும் கீதியோன் பானைகளை உடைத்ததற்கு காரணமும் கூட இதுவாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். 

பானையை உடைத்துவிட்டால் எதிரிகள் ஜெயித்துவிட்டார்கள் என்ற மனபான்மை மீதியானியர்களுக்கு இருந்ததால் பானை உடைப்பு சத்தம் கேட்டவுடன் சிதறி போனார்கள். ஏதிரிகளை அழிப்பதற்கு நம்முடைய ஆண்டவர் போல் எவரும் வழிகளை கண்டுபிடிக்க முடியாது.

கற்றுக்கொள்ளும் சத்தியம் என்ன?

நாமும் நம்முடைய எதிரியாகிய வி்டமுடியாத ஜென்ம சுபாவங்களை, பாவங்களை ஒரு தாளில் எழுதி ஆண்டவரிடம் அறிக்கை செய்து பரிசுத்த ஆவியானவர் என்னும் இருப்பு கோலால் நெறுக்கி ஜெயம் எடுப்போம். ஆமென்.

THANK YOU.  GOD BLESS YOU.
REFERENCE BOOK: EGYPITIAN CULTURE.
GOD BLESS YOU.
YOUR BROTHER
PR. N.SANTHOSH KUMAR.  21/11/2018.  THIRUKOVILUR. VP(DT). T.N. INDIA. CELL:9976516252

Pages