middle ad

மரணத்தை ருசிபார்ப்பதில்லை

"இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலமாய் வருவதை காணும் முன் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று இயேசு சொன்ன யார் அந்த சிலர்?  இயேசு ஏன்? இதை கூறினார்.  தேவனுடைய ராஜ்யம் பலமாய் இறங்கி எப்பொழுது வந்தது?

Pastor N.சந்தோஷ்குமார்,
பதிவு நாள் 1/02/2019
உயிர்ப்பிக்கும் அப்போஸ்தல மிஷன் சபை ஊழியங்கள். ESTED:(1995)
திருக்கோவிலுார்.
விழுப்புரம் மாவட்டம். T.N. CELL;9976516252

(மாற்கு 9:1)  அன்றியும், அவர் அவர்களை நோக்கி: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்

சிலர் இந்த வசனத்தை இயேசுவின் வருகைக்கு ஒப்பிடுவார்கள். உயிர்தெழுதலை, சிலர் மரூப மலை சம்பவத்தை கூறுவார்கள் ஆனால் நாம் இந்த வேதபகுதியை முழுவதும் கூர்ந்து கவனித்தால் இவைகள் எதுவும் இல்லை என்பது தெளிவாக புரியும்.

காரணம் மரூப மலையில் எலியாவும், மோசயும் நியாயபிரமாணத்திற்கு அடையாளமாகவும், தீர்க்கதரிசிகளுக்கு அடையாளமாகவும் வந்து எருசலேமில் இயேசு நிறைவேற்ற போகும் காரியத்தை குறித்து பேசிகொண்டிருந்தார்கள்.

அங்கே தேவனுடைய மேகம் வந்ததே தவிர தேவனுடைய ராஜ்யம் பலமாய் வரவில்லை. ஆகவே இயேசு இதை குறித்து அங்கே கூறவில்லை.

ஆகவே இயேசு யாரை குறிப்பிடுகின்றார்? என்பதை குறித்து கவனமாய் ஆராய்ந்து பார்ப்போம். இயேசு இந்த வசனத்தை கூறும் போது புறஜாதிகளின் நாடாகிய "பிலிப்பு செசரியாவின்" எல்லையில் இருந்துகொண்டு  12 அப்போஸ்தலர்களிடம் கூறுகின்றார். என்பதை கவனிக்கவும். அப்பொழுது அங்கே அந்த புறஜாதி தேசத்தை சேர்ந்த சிலர் நின்று கொண்டு இயேசுவின் வார்த்தையை கேட்டு கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று கூறுகின்றார். காரணம் என்ன?

பொதுவாக பாலஸ்தீனா தேசம் வடக்கிலிருந்து-தெற்க்காக 120 மைல் துாரமும் கிழக்கிலிருந்து-மேற்க்காக 40 மைல் துாரமும் கொண்ட ஏறத்தாழ
40 லட்சம் கொண்ட சிறிய நாடு இந்த நாட்டில் இயேசுவின் ராஜ்யத்திற்குள் இன்னும் யாரும் வரவில்லை. அதாவது யாரும்  இன்னும் முழுமையான கிறிஸ்த்தவனாக இல்லை.

இந்த யூதேயா தேசத்தில் இருந்த அதிகாரம், வல்லமை ரோமர் கையிலும். சட்டமும், தவறான உபதேசங்களும் பாரம்பரியமிக்க மத தலைவர்களாகிய பரிசேயர், சதுசேயர் கையிலும் கட்டுபாட்டிலும் இருந்தது.

ஆகவே இவ்வளவு கடுமையான சூழ்நிலைமையில் இயேசுவின் மறைவிற்கு பின்பு கிறிஸ்த்தவம் யூதேயா தேசத்தை தாண்டி உலகமெங்கும் பரவும் என்பது முடியாத காரியம். ஆகவே மிக குறுகிய காலத்திலே கிறிஸ்த்தவம் அழிந்துவிடும் (அதாவது தேவனுடைய ராஜ்யம்)என்று அங்கு நிற்கும் சிலர் கருதினார்கள். ஆகவே  இப்படி நினைத்து கொண்டிருப்பவர்களில் சிலர் அந்த தேவனுடைய ராஜ்யம் இதே செசரியா பட்டணத்தில் பலமாய் இறங்குவதை பார்க்காமல் மரிப்பதில்லை என்று இயேசு கூறுகின்றார்.

(அப் 2:1)பார்க்கும்  போது முதலாவது பரிசுத்த ஆவியானவர் யூதசீடர்கள் மேல் முதலாவது பலமாய் இறங்கினார். அங்கே தேவனுடைய ராஜ்யம் ஆயிரக்கனக்கான மக்களுக்குள் வந்தது. அநேகர் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

ஆனால்  இயேசு சொன்னது போல்
(அப்10:44)-ல் அதே செசரியாவில் கொர்நெலியு என்பவனுடைய வீட்டில் புறஜாதிகள் மேல் இறங்குகின்றார். அங்கே தேவனுடைய ராஜ்யம் பலமாய் இறங்கினதால் அநேகர் மூழ்கி ஞானஸ்நானம் பெ்ற்றார்கள். இப்படி ஆசியா கண்டம், ஜரோப்பிய கண்டம் தாண்டி ரோம் வரையில் கிறிஸ்த்தவம் இயேசு மரித்த சில ஆண்டுகளில் பலமாய் பரவியது.

இயேசு ஒருபோதும் தனது வெற்றியை சந்தேகிக்கவில்லை காரணம் அவர் தேவனை சந்தேகிக்க வில்லை. ஆகவே தேவனுடைய ராஜ்யத்தை குறித்து சிலர் அற்பமாய் எண்ணினபடியால் இயேசு அவர்கள் கண்களே இதைபார்க்கும் அது வரையில் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று கூறுகின்றார் அதே செசரியாவில் பரிசுத்த ஆவியானவரின் மூலம் தேவனுடைய ராஜ்யம் வருவதை பார்த்தார்கள்.

B.கற்றுக்கொள்ளும் சத்தியம் என்ன?

1.எத்தனை அரசியல்கள், அரசியல் தலைவர்கள் எழும்பினாலும், தேவனுடைய ராஜ்யம் பலமாய் பரவும். அவர்கள் கண்கள் காணும்.

2.எத்தனை கள்ள உபதேசங்கள், எழும்பினாலும், கள்ள ஊழியர்கள் எழும்பினாலும், துர்உபதேசங்கள் செழிப்பது போல் காணப்பட்டாலும் தேவனுடைய ராஜ்யம் பரிசுத்த ஆவியின் பலத்தால் பரவும்.

3.சத்தியத்தை அடக்கவோ, மாற்றவோ முடியாது. அதை அற்பமாய் எண்ணினவர்களுடைய கண்கள் காணும். ஆமென்.

4.பரிசுத்த ஆவியின் பலத்தால் மட்டுமே தேவனுடைய ராஜ்யத்தை கட்டமுடியும் வேறு எதினாலும் கட்டமுடியாது என்பது நாம் அறிய வேண்டிய சத்தியம். 

ஆராய்ச்சிக்கு உதவின நூல்கள்.
1.வேதாகமம். 2. WBC விளக்கவுரை.

வாசித்த அனைவருக்கும் நன்றி.
Pastor N.சந்தோஷ்குமார்,
பதிவு நாள் 1/02/2019
உயிர்ப்பிக்கும் அப்போஸ்தல மிஷன் சபை ஊழியங்கள். ESTED:(1995)
திருக்கோவிலுார்.
விழுப்புரம் மாவட்டம். T.N. CELL;9976516252

Similar Videos