ராகேல் ஏன்? சுரூபங்களை திருடி சென்றாள்.

அண்ணன் Sam Ramalingam அவர்களுடைய கேள்விக்கான பதில் ராகேல் ஏன்? சுரூபங்களை திருடி  சென்றாள்.
ஆதி 31:30−34. முக்கியமான ஆழம் நிறைந்த கேள்வி. இந்த பதிவு இந்த பிண்ணனியம் அறியாதவர்களுக்காக போடுகின்றேன். மேலும் ஒரு சிலருக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

ராகேல் திருடி சென்ற தெய்வங்கள் கீழே பாடத்தில் காட்டப்பட்டுள்ளது போல் லாபனுடைய குடும்ப தெய்வங்கள். இது காலச்சார பிண்ணனியம் கொண்டது.
ஏன்?
1. இது லாபன் வாழ்ந்த பகுதியான யூப்ரிட்டீஸ் எல்லைக்கு அருகில் வடக்கு சீரியாவில் கண்டடெக்கப்பட்ட ஒன்று. அக்காலத்தில் இது ஒரு மனிதன் உட்காரக்கார்ந்து மறைக்ககூடிய அளவு இது தங்கத்திலான சிறிய சட்டம் கொண்ட தெய்வங்கள். ஆதி31:30. இது ஒரு லாபனுடைய  ஒட்டு மொத்த சொத்து பத்திரம் போன்றது.

2. இது லாபன் குறிகேட்பதற்கு என்று ஜோசியர்களால் நட்சத்திரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அவனுடைய குல தெய்வம் or குடும்ப தெய்வம். அதன் அடிப்படையில் தான் யாக்கோபு ராசியான"அல்லது" ஆசீர்வாதமானவன் என்று குறிப்பினால் அறிந்து கொண்டான். இன்னும் இருக்கிறது...........

3. இந்த குறிப்புதான் மிக முக்கியமானது. அதாவது"குல தெய்வங்கள் அல்லது சுரூபங்கள் யாரிடம் இருக்கிறதோ  அவர்களுக்கு தான் தன் தகப்பானாருடைய மறைவுக்கு பின் அவருடைய சொத்துக்கள் அனைத்தும் சேரும் என்பது அக்கால அவ்வூர் வழக்கம். இதை அறிந்த ராகேல் அதை திருடி சென்றாள். பெண்களுக்கு அக்காலத்தில் தகப்பனாருடைய சொத்தில் பங்கில்லை. யாக்கோபை லாபன் அநேக முறை ஏமாற்றி சம்பாதித்த சொத்தை பிடுங்குவதற்கு போட்ட Master Plan ஆக இருக்கலாம் .உட்காரக்கூடிய அளவுஇது தங்த்திலான சிறிய சட்டம்

4. குல தெய்வத்தை திருடுவது அக்காலத்தில் கொடியக் குற்றமாகும்

வாசித்த அனைவருக்கும் நன்றிகள்.
pastor N.santhosh kumar. Thirukovuilur

Pages