middle ad

திஸ்பியனாகிய எலியா

திஸ்பியனாகிய எலியா  “திஸ்பி” என்பதற்க்கான விளக்கமான வேதஆராய்ச்சி.
2ராஜ 17:1- கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா…….

1.திஸ்பி (Tishbite) என்றால் என்ன? “திஸ்பி” (Tishbite) என்ற வார்த்தைக்கு ஆர்வமான விளக்கத்தை பார்ப்பதற்கு முன் திஸ்பி(Tishbite) என்ற இடத்தை குறித்து பார்ப்போம்.
2.இந்த “திஸ்பி” என்பது இஸ்ரவேலில் ஒரு கிராமம். இந்த கிராமத்தில் தான் “எலியா”  பிறந்தான். இது எலியாவின் சொந்த ஊர். இந்த கிராமம் மிகவும் வனாந்திரம் போன்ற வசதி. வாய்ப்பு இல்லாத சிறிய கிராமம். “யாதொரு நன்மையும் எழும்ப முடியாத கிராமம்” புதிய ஏற்பாட்டில் இயேசுவுக்கு “நாசரேத்” என்றால் பழைய ஏற்பாட்டில் எலியாவுக்கு ““திஸ்பி””.

3.இது நப்தலி கோத்திரத்தை சேர்ந்த பகுதியாகும். கலிலேயா கடலில் இருந்து 22km தொலைவிலும் “கீலேயத் மலைக்கு” அருகிலும் “யோர்தான்” நதிக்கு இப்புறத்திலும் அமைந்துள்ள பகுதி. இன்றைக்கு இதனுடைய பெயர் “லிஸ்திப்” (Lisdib). ஆகும்.

4.திஸ்பி (Tishbite) என்ற வார்த்தைக்கு சுருக்கமான விளக்கத்தை பல்வேறு வேதகட்டுரைகள் பகுதியிலிருந்து ஆராய்ந்து குறிப்பிட்டிருக்கின்றேன். வாசித்து ஆண்டவரை துதியுங்கள்.

A. “பஞ்சம் பிழைக்க வந்தவன்”. திஸ்பி (Tishbite)யிலிருந்து கிலேயத்திற்கு குடியேறினவன் ஆகவே ராஜாக்களின் பார்வையில் அற்பமாய் எண்ணப்பட்டவன். ஆகவேதான் “திஸ்பி“ என்ற வார்த்தையை சேர்த்து பயன்படுத்தினான். நீ ஒருவேளை அற்பமாய் “திஸ்பியன்” என்று எண்ணினாலும் சரி “என் வாக்கின்படியே அன்றி பனியும், மழை பெய்யாது என்று கூறுகின்றான். இது தான் இதனுடைய அர்த்தம். இந்த வார்த்தையை தைரியமாக பயன்படுத்தினான். சத்தியம் என்ன? உங்களை யார் அற்பமாய் எண்ணினாலும் உங்களை ராஜாக்களுக்கு முன்பாக மகிமைப்படுத்துகின்றவர் தேவன்.

B. சிறையிருப்பிலிருந்து திருப்பி சிறையாக்குபவன். “Captivity.”  அதாவது பாவத்திலிருந்து விடுதலையாக்கி தேவனுக்கு நேராக திருப்புபவன்.அல்லது நடத்துபவன்

C. “வித்தியாமானவர்களில் வித்தியாசமானவன்“. “Stranger from the Strangers” “ஒட்டகமயிர் தரித்தருந்தவன்”

D. திஸ்பியர்கள்” (Tishbite) –வைராக்கியத்திற்கு பெயர்போனவர்கள்.

E. திஸ்பியர்கள்” (Tishbite) – “ உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள்- “Higer thoughts”

இன்னும் விரிவான விளக்கம் இருந்தாலும் இது நமக்கு போதுமானது என்று எண்ணுகின்றேன்.
வாசித்த அனைத்து தேவபிள்ளைகளுக்கும் நன்றி. ஆராய்ச்சிக்கு உதவின பகுதிகள்
1. Abarim Publications
2.wikipedia
3.Josephus Ant 8;13,2
4.etymology dictionaries.

Pastor N.Santhosh Kumar.
Thirukovilur. Cell:9976516252

Similar Videos