Recents in Beach

header ads

யோவான் மேல் அன்பாயிருந்ததற்கு காரணம் மற்றும் வரலாற்று ஆய்வு

இயேசு எல்லோரையும் விட அப்போஸ்தலர் யோவான் மேல் அன்பாயிருந்ததற்கு காரணம் மற்றும் வரலாற்று ஆய்வு

போதகர்: N.சந்தோஷ்குமார்,
பதிவு நாள் 5/12/2018.
உயிர்ப்பிக்கும் ஊழியங்கள் ESTED:(1995)
திருக்கோவிலுார்.
விழுப்புரம் மாவட்டம். T.N. CELL;9976516252.

அண்ணன் Hosanna K Joseph Yfj அவர்கள் ஆய்வு புத்தகத்திற்க்காக கேட்ட கேள்வின் ஒரு பகுதி அதற்குறிய பதில் நான் பதிவிட்டிருக்கின்றேன். சிறந்த கேள்வியை கேட்ட அண்ணை வாழத்துகின்றேன். பதிவை வாசியுங்கள்

(யோவா 13:23) அந்த சமயத்தில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன்….. இயேசுவின் மார்பிலே சாய்ந்து கொண்டிருந்தான்.

எல்லா சீடரையும் விட இவன் மேல் அன்பாயிருக்க காரணம் என்ன? காரணமில்லாமல் இல்லாமல் இல்லை கொஞ்சம் சரித்திரங்களை ஆராய்ந்து பார்ப்போம்.

எகிப்து, எத்தியோப்பியா நாடுகளிலுள்ள பாரம்பரிய கிறிஸ்தவர்கள் பயன்படுத்திய மதவழிபாட்டு நுால்களில் அதாவது காப்டிக் காஸ்பல் (Coptic Gospel) அதாவது நம்முடைய சுவிசேஷ நுால்கள் (Synaptic Gospel) எழுதப்பட்ட பின்பு ஆரம்ப காலங்களில் எழுதப்பட்ட நுால்களில் காணப்படுகின்ற தகவல் மிகவும் ஆர்வமனாவைகள்.

அவைகள் நமக்கு தரும்  தகவல்கள் என்ன?
யோவான் 2-ம் அதிகாரத்தில் நடந்த  காணவூர் கல்யாணத்தில் மணவாளனுடைய தாய் வேறு யாரும் அல்ல இயேசுவின் தாய் மரியாளுடைய சகோதரி என்றும் அவளுடைய பெயர் "சலோமி" (மாற்கு 15:40) என்றும் மணவாளன் வேறு யாரும் இல்லை அவன் தான் “யோவான்” என்று கூறுகின்றது.

கல்யாணத்தில் இயேசுவின் ஆரம்ப கால சீடர்கள் 70 சீடர்களில் ஒரு சிலர் இருந்தனர். இயேசு ஊழியத்திற்கு வந்த மூன்றாம் நாளில் கல்யாணத்திற்கு செல்கின்றார். இயேசு ஊழியத்திற்கு வந்தவுடனே யாரையும் அப்போஸ்தலராக்க வில்லை பிறகுதான் 70 பேர்களில் 12 பேரை தெரிந்தெடுத்து அப்போஸ்தலராக்குகின்றார் என்று வேதம் கூறுகின்றது.
ஆகவே யோவான் மணவாளனாய் இருக்க வாய்ப்பிருக்கின்றது என்கிறது இந்த தகவல். ஆகவே யோவான் தன்னுடைய வாழ்வில் நடந்த அற்புத்திலிருந்து இயேசுவின் அற்புதத்தை தொடங்குகின்றார் என்று கருதலாம்.
அந்த காணவூர் கல்யாணத்தில் மரியாள் ஏற்கனவே அங்கே இருக்கிறாள். (யோ 2:1) காரணம் மரியாள் உறவினர் என்பதினால் முன்னதாக சென்று கல்யாண வேலையை கவனிக்கின்றார்கள். திராட்சை ரசம் குறைவுப்பட்ட போது (யோ 2:3)  இயேசுவின் தாய் இயேசுவை நோக்கி அவர்களுக்கு திராட்சை ரசம் இல்லை என்று இயேசுவிடம் கூறுகின்றாள்(யோ 2:3) 

இயேசுவிடம் கூற காரணம்?
கல்யாணம் நம்முடைய உறவினர் கல்யாணம் ஆகவே உம்முடைய சீடரை வைத்து கொண்டு திராட்சை ரசத்தை வாங்கி வாரும் என்று தாய் என்ற அதிகாரத்திலும்  மாம்ச உறவிலும் கூறினார்கள்.
ஆனால் இயேசு இங்கேதான் மாம்ச உறவை உடைத்து தான் பிதாவி்ன் சித்தம் செய்ய வந்திருக்கின்றேன் என்கிற அடிப்படையில் ‘’ ஸ்திரீயே எனக்கும் உனக்கும் என்ன?"  என்று கூறி தன்னுடைய தெய்வீக தன்மையை வெளிப்படுத்தினார். 

அதற்கு பின்பு தான் மரியாள் அவர் உங்களுக்கு என்ன சொல்லுகின்றாரோ அதன்படி செய்யுங்கள் என்று கூறுகின்றாள். இன்னும் விரிவாக பிறகு சொல்கின்றேன்.

சரி விஷயத்திற்கு வருகின்றேன். உங்களுக்கு புரியும் வண்ணம் எழுதியிருக்கின்றேன் யோவானுடைய திருமணம் யூதர்களின் முறைகளின் படி முடிந்த ஒரு சில நாட்களில் கலிலேயா கடற்கரையில் யோவான்  தன் தகப்பனுடன் மீன் பிடித்து கொண்டிருக்கின்றான்.
இயேசு முதலாவது பேதுருவையும், அந்திரேயாவையும் அழைக்கின்றார் பிறகு யாக்கோபையும், யோவானையும் அழைக்கின்றார்(மத்தேயு 4:18, 21 )

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் 1.பேதுருவும், அந்திரேயாவும் வலைகளை விட்டு பின் செல்கின்றார்கள்
2. யாக்கோபும், யோவானும் படவையும், வலைகளையும், தன் தகப்பன் செபெதேயும் விட்டு செல்கின்றார்கள்.
3. ஆனால் யோவான் தான் புதியதாக திருமணவன் என்று நினைக்காமல் தன் மனைவியையும் விட்டு விட்டு (தற்காலிகமாக) இயேசுவுக்கு பின் செல்கின்றான்.
சரித்திரங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இதை விட இயேசு இவன் மேல் அன்பாயிருப்பதற்கு வேறு ஒரு சிறந்த காரணம் இருக்கமுடியுமா? என்று தெரியவில்லை.

மற்றவர்களும் ஆரம்பத்தில் ஊழியத்தின் அவசரத்தின் நிமித்தம் தற்காலிகமாக மனைவிகளை விட்டு விட்டு இயேசுவிற்கு பின் சென்றவர்கள்தான். ஆனால் யோவான் புதியதாய் திருமணவன் என்று வரலாறு கூறுகின்றது. புதிய மனைவியை விட இயேசுவின் வார்த்தை உடனடியாக கீழ்படிந்து, அவர் மேல் அன்பு வைத்து யோசிக்காமல் அழைத்தவுடனே வந்தான் பாருங்கள். அது தான் இயேசுவின் அன்பு எல்லா சீடரை விட அதிகமாய் இவன் மேல் இருந்தது என்பதற்கு இதை விட வேறு சிறந்த சான்று இருக்க முடியும் என்று எனக்கு தெரியவில்லை.

சத்தியம் என்ன?
இந்த அர்பணிப்பு நமக்கும் தேவை. இயேசுவிட வேறு எதையும் அதிகமாக நேசிக்காத அன்பு வேண்டும் என்று ஜெபிபோம். ஆமென்.
ஆகவே தான் பொறுப்புள்ள யோவானிட மட்டுமே தன் தாயாகிய மரியாளை நம்பி ஓப்புக்கொடுக்கின்றார். அதாவது அண்ணன் யாக்கோபை விட தம்பி யோவானிடம் ஒப்படைகின்றார். இந்த உலகத்தை விட இயேசுவை அதிகம் நேசிக்கின்றவர்களை நம்பி சிறந்த பொறுப்புகளை கொடுக்கின்றார். வாசித்த அனைவருக்கும் நன்றி. God bless you.

குறிப்பு: பகிர்வதற்கு முன்.
இன்றைக்கு ஒரு சில ஒன்றும் இல்லாத பிரசங்களுக்கும், 40 நிமிட பிரசங்கத்தில் 150 அல்லேலுாயா! ஆமென்! சொல்லி ஜனங்களுக்கு சத்தியங்களை சொல்லாமல், தன்னைப்பற்றியே பெருமையாக பேசி வீணாக நேரத்தை கடத்தி முடிக்கின்ற பிரசங்கங்களுக்கு லட்சங்களை காணிக்கைகளாகவும், கைதட்டல்களையும், வாரி வழங்கும் இக்கடைசி காலங்களில்
தேவபிள்ளைகள் இலவசமாக பயனடைய வேண்டும் மற்றும் சத்தியத்தில் வளர வேண்டும் என்ற தாகத்தில் இரவும் பகலும் வேதத்தை, வரலாற்று சான்றுகளை ஆராய்ந்து அதிக நேரம் எடுத்து பிரதிபலன் எதிர்பாரமல் பதிவிடுகின்றேன். 

ஆகவே பதிவுகளை மற்றவர்களுக்கு பகிரும் போது என்னுடைய பெயரை நீக்கி விட்டு பகிர வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்னுடைய பதிவு மட்டுமல்ல வேறு யாருடைய பதிவுகளையும் அப்படி பகிர வேண்டாம் காரணம் அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் உங்களால் பதில் கூறு இயலாது.

இன்னும் கிறிஸ்த்துவுக்குள் அநேகரை தேறினவர்களாக நிறுத்த இது போன்ற வரலாற்று பதிவுகளை எழுத தேவன் எனக்கு பெலன், தரும்படி ஜெபித்துக்கொள்ளுங்கள்..

போதகர்: N.சந்தோஷ்குமார், பதிவு நாள் 5/12/2018.
உயிர்ப்பிக்கும் ஊழியங்கள் ESTED:(1995)
திருக்கோவிலுார்.
விழுப்புரம் மாவட்டம். T.N. CELL;9976516252.

Post a Comment

0 Comments