Recents in Beach

header ads

தேவன் சிவந்த சமுத்திரத்தை இரண்டாக பிளந்தார்?

ஏன்? தேவன் சிவந்த சமுத்திரத்தை இரண்டாக பிளந்தார்? எகிப்திய இராணுவங்களை அழிக்க பல வழிகள் இருந்தும் ஏன் சமுத்திரத்தில் அழித்தார்? மிக ஆர்வமான பிண்ணனியத்தை ஆராய்ந்து போட்டிருக்கின்றேன். ஏதோ என்னால் முடிந்தது நான் ஒரு வேதபண்டிதர் அல்ல ஒரு சிலருக்கு பிரயோஜனமாய் இந்த Backround இருக்கும் என்று எண்ணுகின்றேன்.

இவர்கள் சிவந்த சமுத்திரத்தை கடப்பதற்கு முன் "பாகால்செபோன்" என்ற இடத்தை கடக்கின்றார்கள்.
எண் 33:7 ஏத்தாமிலிருந்து புறப்பட்டுப்போய், பாகால்செபோனுக்கு எதிராக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடிக்குத் திரும்பி, மிக்தோலுக்கு முன்பாகப் பாளயமிறங்கினார்கள்.

கிழே பாடத்தில் காட்டபட்ட "புராண கடவுள் தான் பாகால்செபோன். இந்த  பாகால்செபோனை 501 மீட்டர் உயரமுள்ள மலையிலே எகிப்தியர்கள் புயலின் கடவுளாகவும், சிவந்த சமுத்திரத்தை ஆளுகை செய்கின்ற கடவுளாகவும் வடக்கில் அமர்ந்திருக்கும் கடவுளாகவும் வழிப்பட்டனர்.

எகிப்திய இராணுவம் நினைத்தது இவர்களை நாம் அல்ல இந்த "பாகால்செபுனேனே" அழித்துவிடுதற்கு இந்த சிவந்த சமுத்திரத்திற்கு இங்கு கொண்டு வந்திருக்கின்றது.என்று மகிழந்திருக்கும் வேளையில் தேவன் செங்கடலை இரண்டாக பிளக்க செய்து, அந்த எகிப்திய ராணுவங்களை அதிலே முழ்க செய்து முற்றிலும் அழித்து. உன் கடவுள் பெயருக்கு மட்டும் தான் கடவுள். உலகத்தையும் சமுத்திரத்தையும் ஆளுகை செய்கின்றவர் இஸ்ரவேலின் தேவன் மட்டுமே தெய்வம் என்று காட்டவே தேவன் சிவந்த சமுத்திரத்தை இரண்டாக பிளந்தார். ராணுவங்களை அழித்தார். தொடரும்....
வாசித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி God bless you.
Pr. N. Santhosh kumar.
Thirukovilur. villupuram dist. T. N. india.

Post a Comment

0 Comments