middle ad

அந்நிய அக்கினி

1.அந்நிய அக்கினி (UNAUTHORIZED FIRE)  என்றால் என்ன? (லேவி 10:1).
2.நாதாபும் அபியூவும் அந்நிய அக்கினியை  கொண்டு வர காரணங்கள் என்ன? (லேவி10:2-10). 3.புதிய ஏற்பாட்டின் அந்நிய அக்னி. வாசியுங்கள் சத்தியத்தை பகிருங்கள் நன்றிகள்.

.N.சந்தோஷ்குமார்,
பதிவு நாள் 12/1/2019
உயிர்ப்பிக்கும் அப்போஸ்தல மிஷன் சபை ஊழியங்கள். ESTED:(1995)
திருக்கோவிலுார்.
விழுப்புரம் மாவட்டம். T.N. CELL;9976516252.

(லேவி10:1) பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.

(லேவி10:2) அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்

ஒரு ஆசாரியன் பலி செலுத்தும் போது தேவன் தம்முடைய சொந்த அக்கினியை அனுப்பி பலியை பட்சித்தால் அது தேவனால் அங்கீகரிக்கப்பட்ட ஊழியம்.

(யாத் 30:1-10) ன்படி ஒரு ஆசாரியன் துாப பீடத்தில் துாபவர்க்கத்தை காலைத் தோறும் ஆசாரிப்பு கூடாரத்தில் விளக்கு ஏற்றும் போது  காட்டவேண்டும். இதில் அந்நிய அக்கினியை போட்டு காட்டக்கூடாது. அந்த துாபகலசத்தில் ஆசாரிப்பு கூடாரத்திற்குள் இருக்கும் வெண்கல பலிபீடத்தில் நெருப்பு தணலைதான் (லேவி 16:12) எடுத்து  துாபகலசத்தில் பொடியாக்கப்பட்ட சுகந்த துாபவர்க்கத்தை  எடுத்து ஆசாரிப்பு கூடாரத்திற்குள் சென்றுதான் போட வேண்டும் அதனுடைய மேகம் (புகை) சாட்சியின் பெட்டியை மூடத்தக்கதாக போட வேண்டும். (லேவி16:13) போட்டுதான் துாபவர்க்கம் காட்ட வேண்டும். தேவன் சொன்ன சடத்தின்படி செய்யவில்லை என்றால் அக்கினி பலியை பட்சிப்பதற்கு பதில் பலி செலுத்துகின்றவனை பட்சிக்கும் ஆகவே நாதாபுக்கும், அபியுவுக்கும் இங்கு நடந்தது இதுதான். இதை சுருக்கமாக எழுதியிருக்கின்றேன்.

A.அந்நிய அக்கினியின் எபிரெய விளக்கம்.

அந்நிய அக்கினி என்பதற்கு எபிரெய பதம் 
Heb: Zoor. (சூர்)- “STRANGE” என்றால்

1. STRANGE—அந்நிய அக்கினி. இன்னும் தெளிவாக சொல்ல போனால் “எதிரியான அக்கினி” வேசி.

2. UNAUTHORIZED FIRE--கட்டளையிடப்படாத அக்கினி. அங்கிகரீக்கப்படாத அக்கினி.

3. PROFANE- பரிசுத்ததில் குறைவான, இந்த . Profane-என்ற வார்ததை  Profanns  என்கிற லத்தீன் வார்த்தையிலிருந்து வருகின்றது. அதாவது (out side of temple or church). சபைக்கு வெளியே எடுக்கப்பட்ட அக்கினி. இன்னும் விளக்கங்கள் அதிகம் இருந்தாலும் இது போதும் என்று எண்ணுகின்றேன்.

4. Nadab- "நாதாபு" என்பதற்கு (Genarous) தராளமானவன்.

5.Abihu- "அபியூ" என்பதற்கு he is my father. அவர் என்னுடைய தகப்பன். என்று அா்த்தம்.

B.நாதாபும் அபியூவும் அந்நிய அக்கினியை கொண்டு வந்ததற்க்கான காரணங்கள் என்ன?

1.நிதானம் இழந்திருந்தார்கள்.

நாதாபும் அபியூவும் மது அருந்திவிட்டு
(லேவி 10:9) நிதானம் இழந்து காணப்பட்டதால். ஆசாரிப்பு கூடாரத்திற்கு வெளியே அக்கினியை உருவாக்கி துாபகலசத்தில்  போட்டு அந்த துாபவர்க்கத்தையும் வெளியிலேயே போட்டு கொண்டு வந்தார்கள். தூபவர்க்கமும் ஆசாரிப்பு கூடாரத்திற்குள்தான் சென்று போட வேண்டும் இதை இரண்டையும் வெளியிலேயே செய்தார்கள். உடன்படிக்கையின் மேல் பரிசுத்த பொருட்கள் மேல் பட வேண்டிய (புகை) தூபமேகம் கண்ட இடங்களில்பட்டது.

ஏற்கனவே அவர்கள் மது அருந்திவிட்டு சென்றதினால் தான் மோசே ஆசாரி்ப்பு கூடாரத்திற்குள் போகின்றவர்கள் மதுவோ, திராட்சை ரசமோ அருந்தகூடாது என்று கூறியிருந்தான். (லேவி 10:9) நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்க வேண்டுமானால் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்ச்சைரசத்தையும், மதுவையும் குடிக்கவேண்டாம்.

ஆகவே தலைவன் தெளிவாக இருக்க வேண்டும். (1தீம் 3:1-5) தலைவன் தெளிவாக இல்லையென்றால் சபைக்குள் அந்நிய அக்கினி வருவது உறுதி.

2.குறுக்கு வழியை கையாண்டார்கள்.

பலிபீடத்திலிருந்து அக்கினியை எடுத்து போடுவது கடினம். சில சுத்திகரிப்பு செய்யவேண்டும். (லேவி 16:12)  ஆகவே இவர்கள் குடிபோதையில் குறுக்கு வழியை கையாண்டார்கள். ஆசாரி்ப்பு கூடாரத்திற்கு வெளியே குப்பைகுளங்களை கூட்டி நெருப்பு மூட்டி அக்கினியை  எடுத்து துாபகலசத்தில் அவர்கள் இஷ்ட்டத்திற்கு போட்டு துாபம் காட்டினார்கள்.

குறுக்கு வழி என்றுமே ஆபத்து.
ஊழியத்தில் சீக்கிரம் பிரபல்யமடைவதற்கு, சபையில் கூட்டத்தை சேர்ப்பதற்கு உடனே மேலே வருவதற்கு, பல யுக்திகளை இந்த கடைசி காலத்தில்
கண்டுப்படித்திருக்கின்றார்கள் என்பது உங்களுக்கே தெரியும். கவனமாக சபைக்குள் ஆட்களை அனுமதியுங்கள்.

மத்7:13 – படி இடுக்கமான வாசல் வழியாக உட்பிரவேசியுங்கள். தேவனுடைய சித்ததின்படி, தேவன் வகுத்தபாதையில் செல்லுங்கள். தேவ அக்கினி எப்பொழுதும் உங்களுடன் இருக்கும்.

3.உலக வழக்கத்தின் படி ஊழியம் செய்தார்கள்.

எகிப்தில் உள்ள ஆசாரியர்கள் பொல்லாத ஆவிகளை விரட்ட அவர்களுடைய வீடுகளுக்கு தங்களுடைய துாபகலசத்தை எடுத்துகொண்டு துாபவர்க்கம் போட்டு வீடுகளுக்குள் மூலை முடுக்குகளெல்லாம் காட்டுவார்கள். அது அவர்களு்கு நடமாடும் துாபபீடம். அப்பொழுது அசுத்தஆவிகள் ஓடும் என்புது எகிப்தியர்களி்ன் நம்பிக்கை அல்லது வழக்கம். இந்த முறையை எகிப்தில் பார்த்து வளர்ந்தவர்கள் ஆகவே இந்த நாதாபுக்கும், அபியுவும் மக்களை பாதுகாக்க இப்படி ஒரு முயற்ச்சியை எடுத்திருக்கலாம் என்கின்றனர் வேத ஆராய்ச்சியாளர்கள்.
உலக வழக்கம் என்பது அந்நிய அக்கினி ஆகவே உலகத்திலிருக்கின்ற எல்லாவற்றையும் சபை அனுமதிக்ககூடாது.

C.புதிய ஏற்பாட்டில் எது? அந்நிய அக்கினி
1. சபை போதகருக்கு ஒரு சில உண்மையை மறைப்பது. (அப் 5:1-11).

2. பாவம் செய்து கொண்டே அந்நியபாஷை பேசுவது. (கலா3:3)

3.வசனத்தில் கலப்படம் செய்வது. (2Co 2:17)

4. வசனத்தை இஷ்ட்டத்திற்கு வியாக்கியானம் பண்ணவது.(2Co 2:17)

5. உணர்ச்சியை துாண்டுகிற ஆராதனைகள், இசைகள், பிரசங்கங்கள், சத்தங்கள்.  தேவனுடைய உண்மையை உணர வைக்கவேண்டும். (யோ 4:23)

6.தேவனை நினைக்கவிடாதபடி தங்களை நினைக்க வைக்கின்ற காரியங்கள்.

இன்னும் அநேகம் இருக்கின்றது நீங்களும் வசனத்தை ஆராய்ந்து பாருங்கள். புதிய ஏற்பாட்டில் பழைய ஏற்பாட்டின் படி சரீரமரணம் வருவதில்லை.ஆனால் ஆவிக்குரிய மரணம் வர வாய்ப்புண்டு இது அநேக ஜனங்களை பின்மாற்றத்திற்குள் நடத்தும்.

ஆகவே அந்நிய அக்கினி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு இந்த கடைசி காலத்தில் சபைக்குள் வர வாய்ப்புண்டு எச்சரிக்கையாக வேதத்தை மாத்திரம் அடிக்கடி பாருங்கள்.தப்பித்து கொள்வீர்கள் ஏனென்றால் அதுதான் பலீபிடத்து அக்கினி.  

வாசித்த, பகிர்ந்த, விரும்பின அனைவருக்கும் நன்றிகள்
God Bless You.

N.சந்தோஷ்குமார்,
பதிவு நாள் 12/1/2019.
உயிர்ப்பிக்கும் அப்போஸ்தல மிஷன் சபை ஊழியங்கள். ESTED:(1995)
திருக்கோவிலுார்.
விழுப்புரம் மாவட்டம். T.N. CELL;9976516252.

Similar Videos