எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்?

நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்?
இதனுடைய ஆழமான கருத்து என்ன?

போதகர்: N.சந்தோஷ்குமார்,
பதிவு நாள் 5/1/2019
உயிர்ப்பிக்கும் அப்போஸ்தல மிஷன் சபை மற்றும்  ஊழியங்கள் ESTED:(1995)
திருக்கோவிலுார்.
விழுப்புரம் மாவட்டம். T.N. CELL;9976516252.

Mat 18:21 அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.

அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.

யூத ரபிகளின் கூற்று படி ஒரு மனிதனை மூன்று தடவை மன்னிக்கலாம் அதற்கு மேல் மன்னிக்க கூடாது என்பது யூத ரபிகளின் சட்டம். ஆகவே தான் பேதுரு தன் சகோதரனை எத்தனை தடவை மன்னிக்க வேண்டும் என்று தன்னுடைய ரபியாகிய இயேசுவிடம் கேட்டு சந்தேகத்தை நிவிர்த்தி யாக்கி கொள்கிறான்.

அதற்கு பேதுரு ஒரு கணக்கு சொல்லுகிறார் ஏழு தரமோ என்று. ஏழு என்பது யூதர்களை பொறுத்த வரையில் பூரணம் ஆகவே பூரணமாய் மன்னிவேண்டுமா?அதற்கு இயேசு ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன். 490 தடவை யல்ல
அதாவது பரிபூரணமாய் என்பது இதன் அர்த்தம்.
பூரணம் (7) என்பது மன்னிக்கலாம் ஆனால் மறக்க கூடாது யூதர்களின் கருத்து.
பரிபூரணம் என்பது எப்பொழுதும் மன்னிப்பது மட்டுமல்ல அந்த தவறை மறந்து விட வேண்டும் என்பது இயேசுவின் கருத்து.

சிலர் மன்னித்து விட்டு மீண்டும் மீண்டும் அதை கிளறி அந்த தவறைப்பற்றி பேசுவார்கள். ஆனால் இயேசு மன்னித்த பிறகு அதைப்பற்றி பேசக்கூடாது மறந்து விட வேண்டும் என்கிறார்.  இதை தான் தேவன் நம் பாவங்களை மன்னிக்கும் போது செய்கிறார். அவர் மாத்திரம் நம் பாவங்களை மீண்டும் நினைத்திருந்தால் நமக்கு ஏது வாழ்க்கை?.
நம் தேவன் நாம் எத்தனை பாவங்கள் செய்தாலும் முடிந்த வரை மக்கள் முன்பாக இதுவரையிலும் நம்மை நல்லவர்களாக காட்டுகிறாரே என்பதை நான் நினைத்த பொழுது கண்ணீரே வந்துவிட்டது. அவர் எத்தனை நல்லவர் அவருடைய மன்னிப்புக்கு அளவே இல்லை.
ஆகவே ஒருவரை மன்னித்தால் பூரணமாய் அல்ல பரிபூரணமாய் எப்பொழுதும் மன்னிப்போம்.
நன்றி. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

போதகர்: N.சந்தோஷ்குமார்,
பதிவு நாள் 5/1/2019
உயிர்ப்பிக்கும் அப்போஸ்தல மிஷன் சபை மற்றும்  ஊழியங்கள் ESTED:(1995)
திருக்கோவிலுார்.
விழுப்புரம் மாவட்டம். T.N. CELL;9976516252.

Pages