கானனுக்கும் (Cannan)கானாவுக்கும் என்ன வித்தியாசம்?

கானனுக்கும் (Cannan)கானாவுக்கும் என்ன வித்தியாசம்?  "கானா" (Cana) என்பதை யோவான் எழுத காரணம் என்ன? சகோ.ஜான் ஜெபராஜ் அவர்களுடைய வியாக்கினத்திற்கு (அ) பதிவிற்கு விளக்கம்.

N. சந்தோஷ்குமார்,
பதிவுநாள்11.1.2019
திருக்கோவிலூர். VP(DT)
Cell:997651622

கானான் என்பது இஸ்ரவேல் தேசத்தின் முந்தைய பெயர். இந்த தேசத்தில் "கானா" என்கிற பெயரில் இரண்டு இடம் உள்ளது.

1. கலிலேயாவில் உள்ள கானா (யோவான்2:1, 4:46, 21:2).
இது நாசரேத்திலிருந்து 7 கி.மீ தூரத்திலும், யூதேயா மலைக்கு அருகிலும் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் இரண்டு (யோவான், யாக்கோபு) பிரதான அப்போஸ்தலர்களின் ஊர். (யோவான்21:2)

2. ஆசேர் கோத்திரத்தை சேர்ந்த கானா யோசுவா 19:24-28.
இந்த இரண்டு "கானா" கானான் தேசமாகிய இஸ்ரவேலில் இருந்தபடியால் மக்கள் குழம்பி விட கூடாது என்பதற்கு யோவான் வித்தியாசத்தை காட்டி எழுதுகின்றார்.

ஆகவே சகோ. ஜான் ஜெபராஜ் சொன்னது போல கானா என்பது கானான் அல்ல இரண்டு "கானா" வில் எந்த கானா ஊரில் அற்புதம் செய்தார் என்பதை விளக்கமாக எழுதுகின்றார் யோவான்.
நோவா குடித்தது போதையுள்ளது. இயேசு திராட்ச்சை ரசமாய் மாற்றியது போதையில்லாத திராட்ச்சை ரசம். ஆகவே கவனமாக வியாக்கியானம் பண்ண வேண்டும்.
வாசித்த அனைவருக்கும் நன்றிகள்

.N. சந்தோஷ்குமார், பதிவுநாள்11.1.2019
திருக்கோவிலூர். VP(DT)
Cell:997651622

Pages