Recents in Beach

header ads

சகோதரர் V.நடராஜ முதலியார்

அன்பு சகோதரர் அவர்களின் வாழ்க்கை
பற்றி ஒரு சில தகவல்கள் உங்களுக்காக
நடராஜ முதலியார் அவர்கள் (ஆப்பிரிக்கா) பீட்டர் மெரீட்ஸ் பர்க் என்ற
நகரிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து தமிழ் மொழியில் கிறிஸ்தவ பாடல்களை
பாடினார்கள் சகோ. நடராஜ முதலியார்
அவர்கள் முதலியார் ஜாதிய அடையாளமாக இருந்தாலும் தென் ஆப்ரிக்காவில் முதலியார் என்பது அவருடைய தந்தையின் பெயராகும்
அநேக ஊழியர்கள் மத்தியில் சகோதரர்
நடராஜ முதலியார் அவர்கள் நல்லவராக
மற்றவர்களுக்கு முன் உதாரணமாக
வாழ்ந்தார்கள்.

EVG. நடராஜ முதலியார் அவர்கள் 1961 ல் முதன்முதலில் இசை தட்டில் பாடிய பாடல்
H.M.V. நிறுவனத்தில் ஒலிப்பதிவு செய்த
1.எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்

EVG.V. நடராஜ முதலியார் அவர்கள்பாடிய
நான்கு பாடல்களுக்கு மெல்லிசை மன்னர்
M.S.V. அவர்கள் இசை அமைத்துள்ளார்கள்
1.ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
2. பலி பீடத்தில் என்னைப் பரனே
3. நன்றியால் பாடிடுவோம்
4. யாரிவர்கள் பாடுவோரே

சகோதரர் V.நடராஜ முதலியார் அவர்கள்
பாடிய பாடல்களை கேட்பதும் பாடுவதும்
எனது ஆவல் சகோதரரை நேரில்
பார்த்ததில்லை அவர் மேல் வைத்துள்ள
பற்றும் பாசத்தால் 1983 ஆம் ஆண்டு எனக்கு சென்னையில் கிடைத்த இந்த நோட்டீசை 36 ஆண்டுகளாக பத்திரமாக
வைத்து இருக்கிறேன்

Post a Comment

0 Comments