middle ad

அருமைச் செல்வங்களே! இந்த விடுமுறை காலங்களில் உங்களை சந்திப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். பரீட்சையெல்லாம் எழுதி முடித்திருப்பீர்கள். நல்ல ரிசல்ட் பெற்று தேசத்தில் உயர்ந்திருக்க வா்த்துகிறேன். வாங்க ரிலக்ஸா ஒரு கதை கேட்கலாம்..

பசியோடு நீந்தி கலைத்த குட்டிமீன் சோனு அந்த கொலு கொலு புழுவைக் கண்டதும் பேரானந்தம் கொண்டது. அதன் அருகில் வேகமாக நீந்தியது. தனது வெகுநேர பசிக்கு நல்ல விருந்து மிதந்து வருவது அதற்கு அளவில்லா ஆனந்தத்தைக் கொடுத்தது.” இன்று நல்ல சாப்பாடு …..ஒரு பிடி பிடித்துவிடுவேன்!” என்று எண்ணிக்கொண்டு அந்த தூண்டிலில் உள்ள புழுவை நோக்கி விரைந்து சென்றது சோனு.ஆனால் , சோனுவின் மூத்த நண்பர்கள் தொங்கும் புழுவை உண்ண வேண்டாம் . “அது ஆபத்து ….நீ அதனை சாப்பிட்டால் வாயில் கம்பி குத்தும் …செத்து விடுவாய்….”என்று கூறிய வார்த்தைகளையும் மனதில் ஒரு நிமிடம் யோசித்தது. இருப்பினும், புழு மிகவும் அருகில் கொலு கொழுவென மிதந்தது. இந்த பெரிய மீன் அண்ணன்கள் சொன்னது பொய்யாக கூட இருக்கலாம்.நான் இதனை சாப்பிட்டால் அவர்களுக்கு உணவு கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தில் என்னை பயமுறுத்தி இருக்கலாம் … என்று சோனு தனக்குள் சமாதனம் செய்து கொண்டு புழுவின் அருகில் நெருங்கியது. அப்பொழுது சோனுவின் மாமா சீனு வேகமாய் வந்து சோனுவை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றியது. சோனு உன்னிடம் எத்தனை முறை சொல்லிருக்கோம்... அந்த புழுவை சாப்பிட வேண்டாம்னு… ஏன் நீ கேட்காமல் போனாய்?….என்று கோபத்துடன் கேட்டது. அதற்கு சோனு ,” நான்….நான்….நினைத்தேன் நீங்கள் என்னை ஏமாத்தரிங்கனு ….” என்றது பயத்துடன். நீ என்னோடு கடலின் கரைபக்கம் வா…உண்மை புரியும் …என்று கூறி சோனுவை இழுத்துச் சென்றது. அங்கே ஏராளமான மீன்கள் செத்து மிதந்து கொண்டும், புழுவை வைத்து சாப்பிடமுடியாமல் தூண்டில் குத்தப்பட்ட வாயோடும்…வானத்தின் பறவைகளுக்கு இரையாகி கொண்டும் இருந்தன. “பார்த்தாயா சோனு…. நீ கண்ட புழு உணவு அல்ல..உன் உயிரை பறிக்கும் சத்துரு.நீ எங்களை நம்பாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இந்த காட்சியைப் பார்த்தாவது திருந்து. … “என்று கூறி விட்டு சென்றது. ஒரு சில வாரம் நல்ல பையனாக இருந்தது சோனு. ஆனாலும்.. நாளுக்குநாள் வித்தியாசமான கொழுக் மொழுக் புழுக்களைப் பார்த்து நாக்கில் எச்சி ஊறியது ….ஒரு நாள் சோனு இப்படியாக யோசித்தது.நான் அறிவாளி …தூண்டிலில் சிக்காமல் புழுவை மட்டும் வேகமாக கொத்திக்கொண்டு வரும் திறமை என்னிடம் உள்ளது ..அந்த பெரிய மீன்கள் சோம்பேறிகள்…அதனால் தான் தூண்டிலில் சிக்கி விட்டனர்…என் திறமையை இந்தக் கடலுக்கு காட்டுகிறேன் என்று சபதம் போட்டுச் சென்றது. தூண்டிலில் தொங்கிய புழுவை பிடித்து ஒரு வாய் சுவைத்து. ஆஹா …என்ன அருமையான ருசி.. என்று சொல்லி முடிக்கும் முன்னர் யாரோ மேலே இழுப்பது போன்று இருந்தது. அந்தோ பரிதாபம். …சோனு தூண்டில் புழுவிற்கு இரையானது. குட்டி தம்பி, தங்கை தூண்டில் புழு போல சாத்தான் அநேக காரியங்களை ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்கையில் கண் முன் கொண்டு வருவான்….ஆனால் அதில் மயங்காமல் வேத வசனம் சொல்லுகிற படி நல்ல பிள்ளைகளாக இருக்கனும். 

 அருமை தம்பி தங்காய்.. நீங்கள் யாரோ ஒருவரால் கண்காணிக்கப்படுகிறீர்கள். இது எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய காலம். உங்கள் முன் இருக்கிற பிரகாசமான எதிர்காலத்தை அழிக்க ஏராளமான வலைகளை விரித்து பிசாசு காத்திருக்கிறான். இந்த விடுமுறை காலங்களில் நீங்கள் எங்கிருந்தாலும் தேவனை சார்ந்து கொள்ளுங்கள். உங்கள் பெற்றோர் அனுமதிக்காத எங்கும்  நீங்கள் செல்வதை தவிர்த்து விடுங்கள். எனக்கு எல்லாம் தெரியும், நான் இப்படி தான் இருப்பேன் என்று சோனு போல உங்கள் கண்களுக்கு இனிமையானதை தேடி நல்ல எதிர்காலத்தை இழந்துவிடாதிருங்கள். 

” தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்கு சமனான பாதை . தன் நடையை கவனிதிருக்கிறவன் தன் ஆத்துமாவை காக்கிறான்.- நீதிமொழிகள் 16:17″

நிச்சயம் இந்த கதை பிரயோஜனமாக இருந்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் மேலான கருத்துக்களை குறுஞ்செய்தி மூலம் 9750381784 இந்த எண்ணிற்கு அனுப்பி வையுங்கள். அடுத்த இதழில் மற்றொரு கதையோடு உங்களை சந்திக்கிறேன். Byee...

Similar Videos