middle ad

பேராயர் வேதநாயகம் அசரியா அவர்களின் சமய மற்றும் சமூக பணிகள்

அருட்திரு பேராயர் வேதநாயகம் சாமுவேல் அசரியா அவர்கள் சமூக மற்றும் சமய பணியில் தன் வாழ்நாள் முழுவதும் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்ட ஓர் அற்புதமான சகாப்தம் ஆவார்.

அப்போதைய திருநெல்வேலி மாவட்டம் வெள்ளாளன்விளை என்ற குக்கிராமத்தில் சாதாரண எளிய குடும்பத்தில் அருட்திரு.தாமஸ் வேதநாயகம் மற்றும் திருமதி.எலன் இவர்களுக்கு 1784 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இவர் மகனாகப் பிறந்தார். சிறுவயது துவக்கி இறைபக்தியிலும் நல்லொழுக்கத்திலும் நேர்த்தியாய் இவரது பெற்றோர் வளர்த்தனர். இதனால் தன் வாழ்வு சமூகத்திலும், இறைபணியிலும் எவ்விதத்திலும் கறைபட்டுவிடக்கூடாது என்பதில் மிக கவனமாயிருந்தார். மாலை நேரங்களில் தன் ஊருக்கு அருகாமையில் உள்ள தேரி மணலில் இந்திய தேசத்தின் வரைபடத்தை வரைந்து ஜெபிப்பதும் திட்டமிடுவதும் இவரது பொழுதுபோக்காக இருந்தது .

வெள்ளாளன்விளையிலும் மெஞ்ஞானபுறத்திலும் தன் இளவயது கல்வியை முடித்து மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் இணைந்தார். அந்த நாட்களில் இவரது நல்ல குணத்தைக் கண்ட அப்போதைய பிரிட்டிஷ் முதல்வர் வியந்துபோய் மற்ற மாணவர்களிடம் இருந்து வேறுபடுத்தி "அசரியா" என்ற பெயரை அவருக்கு சூட்டினார்.

அசரியாவின் சமயப்பணி

அசரியா அவர்களுக்கு சிறுவயது முதலே ஊழியம் செய்வதும் தேவனுக்கு உற்சாகமாய் கொடுப்பதும் விருப்பமான ஒன்றாகும். தன்னுடைய 19வது வயதில் ஒய்எம்சிஏ இயக்கத்தின் தீவிர சுவிசேஷகராக மாறினார் பின்பு அதே இயக்கத்தில் தனது 21வது வயதில் தென்னிந்தியாவின் ymca செயலாளராக பணிபுரிந்தார். தேவையை உணர்ந்து இவர் இந்திய மிஷனரி சங்கம் மற்றும் இந்திய சுதேச மிஷனரி சங்கம் இவ்விரண்டு சங்கங்களையும் அவர் நிறுவினார்.

1909 ஆம் ஆண்டு தனது 35 ஆவது வயதில் ஆங்கிலிக்கன் திருச்சபையின் ஆயராக அருட்பொழிவு பெற்றார். கடவுளுடைய அழைப்பை உறுதிப்படுத்திக்கொண்டு ஆந்திராவில் உள்ள தோரணக்கல் பகுதியில் பணியாற்றினார். சுவிசேஷத்தை பிறருக்கு கூறாத திருச்சபை செத்துப்போன திருச்சபை என்று மேடைகளில் உரக்க கூறினார். 1912 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி தோரணக்கல் பேராயத்தின் முதல் பேராயராக கல்கத்தாவில் திருநிலைப்படுத்தப்பட்டார். அன்று முதல் அவருடைய மரணம் வரையிலும் அவரே இந்தியாவின் முதல் பேராயராக திகழ்ந்தார்.

1936 ஆம் ஆண்டு தோரணக்கல் பகுதியில் இந்திய மற்றும் இஸ்லாமிய கலாச்சார கட்டிட அமைப்பில் மாபெரும் ஆலயத்தை கட்டி எழுப்பினார். இரவு நேரம் ஓய்வெடுக்க தனக்குத்தானே ஒரு குடிசை வீட்டை அமைத்துக் கொண்டார்.  உயர்வுக்கு மேல் உயர்வு வந்த போதும் தன் நிலையை மறவாத அசரியா தனது பேராயம் முழுவதும் மாட்டு வண்டியிலும் சைக்கிளிலும் சுற்றித்திரிந்து நற்செய்தியை அறிவித்தார். நற்செய்திப்பணி பணியை  தீவிரமாகிக் கொண்டு போக 250 க்கும் அதிகமான இந்திய ஆயர்களை உருவாக்கினார். இவருடைய கூட்டங்களுக்கு இரண்டு லட்சத்துக்கும் மேலானோர் பங்கு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"கிறிஸ்தவத்தில் காணிக்கை சேகரிக்க படக்கூடாது படைக்கப்பட வேண்டும்" என்பதும் "கிறிஸ்தவ திருப்பணி சிறந்து விளங்க திருச்சபைகள் இணைந்து ஒன்றாக செயல்பட வேண்டும்" என்பது இவரது பொன்மொழிகளாக கருதப்படுகிறது. இவரது நீண்ட நாள் கனவு இவருடைய மரணத்துக்குப் பின்பு 27 - 9 -1947 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தென்னிந்திய திருச்சபையாக உருவாகியது.

அசரியாவின் சமூகப்பணி

ஒவ்வொரு கிறிஸ்தவரும் இறைப்பணியில் மட்டுமல்ல சமூகப் பணியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பது அவருடைய ஆலோசனை. சமூகத்தில் தன்னுடைய வார்த்தையினால் மட்டுமல்ல வாழ்க்கையிலும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் அவர் மிகுந்த கவனம் செலுத்தினார். அவர் வாழ்ந்த நாட்களில் திருமணத்தின்போது வரதட்சணை வாங்கும் பழக்கம் தென்னிந்தியாவில் சற்று அதிகமாகவே இருந்தது இதனால் ஏராளமான பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தனர். இதனைக் கண்டு வேதனையடைந்த அசரியா அவர்கள் 1898ஆம் ஆண்டு அன்பு மரியம்மன் என்பவரை வரதட்சணை எதுவும் வாங்காமல் வெறும் 40 ரூபாய் செலவில் தன்னுடைய திருமணத்தை நடத்திக் காட்டினார். திருமதி அன்பு தென்னிந்தியாவிலேயே கல்லூரி படிப்பை முடித்த முதல் கிறிஸ்தவ பெண் என்பது குறிப்பிடத்தக்கது. தன் மேன்மைகளை கழைந்து தன் கணவனோடு சமூகப்பணியில் அதிகமாய் ஈடுபட்டார்.

தேசப்பிதா என்று அழைக்கப்படும் திரு காந்தியடிகள் மற்றும் டாக்டர் அம்பேத்கார் இவர்களைப் போன்ற பெரும் தலைவர்களோடு நெருங்கிய நண்பராக வாழ்ந்து வந்தார். ஆயினும் இந்து மதம் போதிக்கும் சாதி அமைப்பை எதிர்த்தார். சாதி மறுப்பு திருமணத்தை ஆதரித்ததோடு மட்டுமல்லாமல் சாதிய முரண்பாடுகளை களைய தனி அமைப்பையும் உருவாக்கினார். 1907 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற உலக கிறிஸ்தவ மாணவர் இயக்க மாநாட்டிலும் பங்குபெற்று இது குறித்து உரையாற்றினார்.

மேலும் மேற்கத்திய ஆதிக்கத்திலிருந்து ஆசிய கண்டத்திணை விடுதலையாக்க உலகளாவிய அளவில் சிந்தனைகளை எடுத்துரைத்து வெற்றியும் கண்டார்.

சமூகத்தை சீர்படுத்த கல்வி மிக அவசியம் என்பதை உணர்ந்த அசரியா ஆண்களுக்கு இணையாக பெண்களும் கற்க வேண்டும் என்று பெண்களுக்காகவே ஒரு கல்வி கூடத்தை ஆரம்பித்தார். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், கூட்டுறவு கூடங்கள், அச்சகங்கள் போன்றவைகளை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தினார்.  மேலும் ஓரங்கட்டப்பட்ட ஏழை மக்களுக்கும் ஆங்கிலேயே அரசின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் ஒரு பாலமாக இவர் திகழ்ந்தார்.

1919 ஆம் ஆண்டு வெள்ளைச்சோளம் பஞ்சம் என்ற கொடிய பஞ்சம் உண்டானது. அந்நாட்களில் தனக்கு இருந்த உணவை மக்களுக்கு கொடுத்துவிட்டு பட்டினியோடு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது மக்களுக்கு பல உதவிகளை அவர் செய்தார். மதங்களைக் கடந்து இன்றளவும் தோரணங்கள் பகுதியை சுற்றிலும் இருக்கிற ஜனங்கள் அவரை நினைவு கூறுகிறார்கள்.

பேராயர் அசரியா அவர்களின் சமய மற்றும் சமூக பணியினைப் பாராட்டி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 1912 ஆம் ஆண்டு கௌரவப் பட்டம் வழங்கியது

பேராயர் ஆசிரியை அவர்களை நினைவு கூறுகிற இந்த நல்ல நாளில் அவரைப்போல தன்னலமற்றவர்களாய் சமய மற்றும் சமூக பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு கடவுளுக்குப் பிரியமாய் வாழ நம்மை அர்ப்பணிப்போமாக..

தொகுப்பு
பாஸ்டர். பெவிஸ்டன். B.Min., B.Th., M.Div.,

Similar Videos