middle ad

அற்புதங்கள் எதற்காக?
          
             நம் ஆண்டவர் செய்த அற்புதத்தில் தெய்வீக நோக்கங்கள் இருந்தது. நம்ஆண்டவரின் தெய்வீக நோக்கங்கள் நமது ஊழியத்தில் நிறைவேற வேண்டும். பழைய ஏற்பாட்டு சபைக்காக அவர்கள் இரட்சிக்கப்படும் முன்பு எகிப்தில் பத்து அற்புதங்கள் தேவன் செய்தார். அவர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்து இரட்சிக்கப்பட்ட பிற்பாடு அவர்களின் நாற்பது வருட வனாந்தர வாழ்க்கையில் 12,500 அற்புதங்களை தேவன் செய்தார். நமது ஊழியத்திலும் அற்புதங்கள் நடக்கிறது.

அற்புதங்களைப் பற்றிய தெய்வீக நோக்கம் என்ன? 

1. பாவமில்லாத பரிசுத்த வாழ்க்கை வாழ (யோவான் 5:14) 38 ஆண்டுகளாக நடக்க முடியாத படுக்கையில் படுத்திருந்தவனை ஒருநிமிடத்தில் நம் ஆண்டவர் எழுந்து நடக்கும்படி அற்புத சுகம் கொடுத்தார். அவனுக்கு ஆண்டவர் சொன்ன வார்த்தை என்ன? இனி பாவம் செய்யாதே என்பதாகும். எனவே நமது ஊழியத்திலும் அற்புதங்களை பெறுகிறவர்கள் பாவத்தை விட்டு மனந்திரும்பி, பரிசுத்த வாழ்க்கை வாழ மனந்திரும்பி இரட்சிக்கப்பட வேண்டும். 

2. இயேசுவின் சீடராக (மாற்கு 10:52) பிறவிலேயே குருடனாக பிறந்தவன் பிச்சையெடுக்கும்படி தெருவில் அழைந்தவனுக்கு அற்புத சுகத்தை கொடுத்து அவனுக்கு பார்வையை உண்டாக்கினார் (மாற்கு 10:46=52). அடுத்த நிமிட முதல் அவன் இயேசுவை பின்பற்றி இயேசுவின் சீடனானான்.

3. சபையில் சேர்க்கப்பட (அப். 3:8) தன்தாயின் வயிற்றில் பிறந்தது முதல் சப்பானியாய் இருந்து ஆலயத்தின் அலங்கார வாசலில் பிச்சையெடுத்து பிழைத்த சப்பானியை தேவ ஊழியர்களின் ஜெபத்தின் மூலம் அவன் துள்ளிக்குதித்து எழுந்து நடந்தான். அடுத்த நிமிடம் முதல் அவன் ஊழியக்காரர்களை பின்பற்றி (யோவான் 3:11)
தேவாலயத்திற்குள் நுழைந்து ஆராதித்தான் (அப். 3:8).

4. இயேசுவின் நாமம் மகிமைப்பட (யோவான் 2:11) கானா ஊர் கல்யான வீட்டில் கற்சாடியில் உள்ள குடிதண்ணீரை நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மதுரமான திராட்சை ரசமாய் மாற்றி அற்புதத்தை செய்தார். அந்த கல்யான வீட்டில் கர்த்தருடைய நாமம் மகிமைப்பட்டது. நமது ஊழியத்திலும் நடக்கும் அற்புதங்கள் மூலம் கர்த்தர் மகிமைப்பட வேண்டும். (யோவான். 14:12,13).

5. தேவனுடைய வார்த்தையை ஜனங்கள் நம்புவதற்காக (யோவான் 14:3) பவுல் பேசின வசனம் தேவனுடைய வார்த்தை தான் என்று ஜனங்கள் நம்புவதற்காக அற்புதங்களும். அடையாளங்களும் தேவன் செய்தார் (அப். 14:3). எனவே அற்புதங்களை பெற்றுக்கொள்வோம், தேவ வசனத்தை பின்பற்றி நடக்க அர்பணிக்க வேண்டும்.

6. தேவனுடைய இராஜ்ஜியம் கட்டப்பட (லூக். 9:2) நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எல்லா தேவ ஊழியர்களுக்கும் அற்புதங்களை செய்யும் வரங்களை கொடுத்திருக்கிறார். நமது ஊழியங்களின் மூலம் நடக்கும் அற்புதங்கள் மூலம் தேவனுடைய இராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.  மனிதனின் சுய இராஜ்ஜியத்தைக் கட்டுவதற்காக அற்புதங்களை செய்யும் வரங்களை பயன்படுத்தக்கூடாது (லூக். 9:1).

7. நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள (யோவான் 20:30,31) இன்று அற்புதங்களை பெற்றுக்கொள்வோர், கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்து பரிசுத்தமாய் வாழ்ந்து, ஸ்தல சபை ஐக்கியத்தில் நிலைத்திருந்து  வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்டு நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வதற்காக.

அற்புதங்கள் மூலம் சுய இராஜ்ஜியத்தைக் கட்டுகிறீர்களா?

அல்லது தேவனுடைய இராஜ்ஜியத்தைக் கட்டுகிறீர்களா?

போதகர் ஜான் சங்கர்

Similar Videos