middle ad

துதி கன மகிமைக்கு பாத்திரர்

துதி கன மகிமைக்கு பாத்திரர்
தூயாதி தூயவரே
புகழ்ச்சிக்கும் மேன்மைக்கும் உரியவர்
கர்த்தாதி கர்த்தர் நீரே

உம்மை துதித்திடுவேன்
உம்மை போற்றிடுவேன்
உந்தன் நாமத்தை ஸ்தோத்தரிப்பேன்

1) போக்கிலும் வரத்திலும்
அடைக்கலமானவரே
கையிடும் வேலைகள் யாவையும்
வாய்த்திட செய்பவரே
எல்லா தீமைக்கும் விலக்கி காத்து
தீமையை நன்மையாய் மாற்றினீர்

2)வானிலும் பூவிலும்
பரிசுத்தரானவரே
உம்மைப்போல உலகில்
வேறு தெயவம் இல்லையே
எல்லா பாவத்தையும் நீக்கி மீட்டு
நித்திய வாழ்வினை
தந்தவரே

Similar Videos